கோடையின் தாக்கத்தில் இருந்து முதியோர் தங்களை எவ்வாறெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.
- முடிந்தவரை, அதிகமாக வெயில் இருக்கும் சமயத்தில் வெளியே செ ல்வதைத் தவிர்க்கலாம்.
- வெளியே போவதற்கு முன்பு தண்ணீர், சிறிது உப்பு கலந்த மோர் அல்லது பழரசம் அருந்துவது நல்லது.
- வெளியேபோகும் பொழுது அவசியம் குடை எடுத்துச் செல்லவும்.
- தலையில் ஏற்படும் சூட்டைத் தணிக்க தலையில் தொப்பி அணியலாம்.
- குறைந்தது 2 – 3 லிட்டர் தண்ணீர் அல்லது வேறு ஏதாவது திரவமோ ஒரு நாளைக்குத் தேவைப்படும். இதய நோய் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி தேவையான நீரை அருந்தலாம்.

- முதியவர்களுக்கு வெயில் அதிகம் இருந்தாலும், தாகம் அவ்வளவாக எடுக்காது. ஆகையால் போதிய தண்ணீர் குடிக்க மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் முதியவர்களை போதிய தண்ணீரைக் குடிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தர்பூசணி, இளநீர், ஆரஞ்சு போன்ற பழ ரசங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். கோடைக்கேற்ற பழம் – நுங்கு நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தரும், பதனீர் கோடையிர் உடலுக்கு மிகவும் நல்லது.
Click to Read: முதுமையில் மருந்துக்கு விடை கொடுப்போம்!
- மசாலா அதிகம் உள்ள உணவை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். உதாரணம்: அசைவ உணவு
- கஞ்சி – கம்பு, திணை ஆகியவற்றில் செய்த கஞ்சி, உடல் சூட்டைக் குறைக்க வல்லது, எளிதில் செரிக்கவல்லது.
- செயற்கைப் பானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

- கண்கள் மிகவும் ஆடாக இருந்தால் வெள்ளரிக்காயை நறுக்கி கண்கள் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் சூடு குறையும்.
- காற்றோற்றமுள்ள அறையில் முடிந்தவரை இருந்தால் நல்லது.
- மின் விசிறி, ஏர்கூலர், குளிர் சாதனப் பெட்டி ஆகிய உபகரணங்களைத் தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.
- படுக்கை அறையில் வெட்டிவேர்க் கொடியைத் தண்ணீரில் நனைத்துத் தொங்கவிட்டால் அறை குளிர்ச்சியாக இருக்கும்.
- வேர்க்குரு அதிகம் இருந்தால் கேலமைன் கிரீமை உடலுக்குத் தடவலாம்.

- லேசான பருத்தியிலான அல்லது கதர் ஆடைகளை அணிவது நல்லது.
- காலையிலும் இரவிலும் குளித்தால் உடல் சூடு குறையும்.
- கண்ணிற்குக் குளிர்ச்சி தரும் கண்ணாடியை உபயோகப்படுத்தலாம்.
- அரிப்பு அதிகமாக இருப்பின், டாக்டரை கலந்து அதற்குத் தேவையான மாத்திரைகள் மற்றும் களிம்பினை உபயோகப்படுத்தலாம்.
Click to Watch: மறதிநோயை குணப்படுத்த முடியுமா?
ஆகவே கோடையில் குளிர்ச்சி பெற தண்ணீர், மோர். பழரசம், பதநீர், நுங்கு, கஞ்சி போன்றவைகளை தினமும் சேர்ந்துக்கொண்டு, லேசான பருத்தி ஆடை அணிந்து, தினமும் இருமுறை குளித்து வந்தால் போதும். நாம் இருக்கும் இடத்திலேயே ஊட்டியின் குளிர்ச்சியை ஓரளவிற்கு அனுபவமிக்க முடியும்.