வெறும் காற்று நிறைந்த பைகள்; அதற்குள் எத்தனை செயல்பாடுகள்! எது நமக்கு இன்றியமையாதது இதயமா? இதுவா? என்றால், பதில் கூற ஞானியும் திணருவார்!
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு எது? என்றால், நுரையீரலே அஃது என்பது தான் விடை! அத்தகைய நுரையீரலின் செயல்திறனைப் பரிசோதிக்கும் வழிமுறைகளை விளக்குகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.
நுரையீரல் செயல்திறன் அல்லது நுரையீரல் செயல்பாடு (Lung Function)
நுரையீரல் செயல்திறன் அல்லது நுரையீரல் செயல்பாடு (Lung Function) என்பதை ‘நுரையீரல் செயல்பாடுச் சோதனை’ (Pulmonary Function Test – PFT) மூலம் மிக எளிமையாகக் கண்டறியலாம்.
இதற்குப் பயன்படும் கருவியின் பெயர் ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry). இக்கருவியின் ஒருமுனைக் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். மறுமுனையில் குழாய் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.

அக்குழாயை வாயில் வைத்துக் காற்றை உள்ளிழுக்கும் போது கீழ்க்கண்டவற்றைக் கண்டறியலாம்.
- நுரையீரல் எவ்வாறு உள்ளது?
- சாதாரணமாக உள்ளதா?
- அசாதாரணமாக உள்ளதா?
- அசாதாரணமாக உள்ளது என்றால், என்ன பாதிப்பு அல்லது நோய்த் தொற்று உள்ளது?
- சுவாசக் குழாயில் அடைப்பு உள்ளதா?
- நுரையீரல் குழாயில் சுருக்கம் உள்ளதா?
- காற்றுப் பைகளில் காற்றின் கொள்ளவு எவ்வாறு உள்ளது?
- நுரையீரலின் சுருக்கி-விரியும் தன்மை எவ்வாறு உள்ளது?
- சி.ஓ.பி.டி (COPD) உள்ளதா?
- ஒவ்வாமை (Allergy) உள்ளதா?
- ஆஸ்துமா (Asthma) உள்ளதா?
- காசநோய் (Tuberculosis -TB) உள்ளதா?
- இடைநிலை நுரையீரல் நோய் (Interstitial Lung Disease -ILD) உள்ளதா?
- ஃபைப்ரோஸிஸ் (Fibrosis) உள்ளதா?
- தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) உள்ளதா?
மேலும், மேற்கண்டப் பாதிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதற்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.
READ ALSO: நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்
ஆனால் நுரையீரல் ஆரோக்கியம் என்பது மிக, மிக முக்கியமானது. ஏனெனில் நுரையீரல் மூலமாக மட்டுமே தலை முதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜனை அதிக அளவில் நாம் பெற முடியும்.
“காயமே இது பொய்யடா; காற்றடைத்த பையடா” என்றார் கடுவெளி சித்தர் நமது உடலை. ஏன் அவ்வாறு கூறியிருப்பார்? அந்தக் காற்றடைத்த பை இல்லையெனில் நாம் யாரும் இல்லை என்பதற்காகத் தானே!
எனில், நுரையீரலின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை ஆரோக்கியமாகப் பராமரிப்போம்.
கட்டுரையாளர்
