Homeஉடல் நலம்நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 10 வழிகளை வழங்குகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள். அதனை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்!

1. உடற்பயிற்சிகள்

சுவாசித்தலை அதிகரிக்கக் கூடிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, நீச்சல் பயிற்சிப் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

2. புரத உணவுகள்

பால், பருப்பு வகைகள், காய்கள், கீரை வகைகள், பழங்கள் போன்ற புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நுரையீரல் மாசுகளை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

3. தொடர்ச் சிகிச்சைகள்

ஏற்கனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை நிறுத்தக்கூடாது. தொடர்ச் சிகிச்சையில் இருத்தல் மிக, மிக அவசியம்!

4. சுவாசச் சுகாதாரம்

‘சுவாசச் சுகாதாரம்’ என்பது இருமல், தும்பல் போன்ற செயல்பாடுகளின் போது நம்மிடம் இருக்கக்கூடிய நோய்க் கிருமிகள் கற்றின் மூலம் பிறருக்குப் பரவா வண்ணம் கைகளைக் கொண்டோ, துணியைக் கொண்டோ வாயை மூடி அந்தச் செயல்களைச் செய்தல் ஆகும்.

5. உறக்கச் சுகாதாரம்

சரியான நேரத்தில் உறங்கச் சென்று, சரியான நேரத்தில் விழித்தெழ வேண்டும். காரணம் உறக்கத்திற்கும், சுவாசத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

எந்த விதமான தங்கு-தாடையும் இன்றி நாம் தொடர்ந்து எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். அவ்வாறு உறங்கும் போது மட்டுமே புத்துணர்வை நாம் அடைய முடியும்.

READ ALSO: சிகரெட் பழக்கத்தை உடனடியாக நிறுத்தும் வழி!

6. தடுப்பூசிகள்

நுரையீரலைப் பாதிக்கக் கூடிய காய்ச்சல் தடுப்பூசிகளை வருடத்திற்கு ஒருமுறையும், நிமோனியா தடுப்பூசியை வாழ் நாளில் ஒருமுறையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

7. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி

நோய்த் தொற்றுக்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய கூட்டமான பகுதிகளுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்துச் செல்வதும், அங்கே தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதும் மிக, மிக இன்றியமையாத ஒன்று.

இம்முறைகள் கொரோனா போன்ற தொற்று நோய்க் காலங்களின் போது மட்டும் பின்பற்றப்படுவது அல்ல. காசநோய், ஆஸ்துமா போன்ற மற்றும் நுரையீரல் வியாதிகளில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளப் பின்பற்றப்பட வேண்டும்.

8. நுரையீரல் பரிசோதனைகள்

சரியான கால இடைவெளியில் மருத்துவரை அணுகி நுரையீரலின் செயல்திறனை இரத்தப் பரிசோதனை, ஊடு கதிர் பரிசோதனை (X- Ray) மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

9. புகைத்தல்

‘புகை நமக்குப் பகை’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஆதலால் புகைத்தலை அறவே தவிர்க்க வேண்டும். அத்துடன் தூசி, மாசு, ஒவ்வாமைக் காரணிகள் கலந்தக் காற்று மாசுபாடுகள் நிறைந்த இடங்களைத் தவித்தல் வேண்டும்.

10. கூட்டமான இடங்கள்

நோய்த் தொற்றுக்கு அதிகக் காரணமாக இருக்கக்கூடிய கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடிப் பிரயாணம் செய்வதையும் தவிர்த்தல் சிறந்தது.

சுவாசம் சிறப்பாக நடைபெறும் போது மட்டுமே உடலின் மற்ற உறுப்புக்கள் சீராய், சிறப்பாய் இயங்குகின்றன. எனவே மற்ற உறுப்புகள் இயல்பாய் இயங்க மூலக் காரணமாக இருக்கக்கூடிய நுரையீரலை மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமாய்ப் பராமரிப்போம். அதன் மூலம் மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாய்ச் செயல்பட வழிவகுப்போம்!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read