பெரியவர்களுக்குத் தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.
நகர்ப்புறத்தில் சில குடும்பங்களில் முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலைமறை காயாகப் பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
இளைஞர்கள் மீதான முதியோர்களின் அதிகமான எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவு மற்றும் பணப்புழக்கமுமே தலைமுறை இடைவெளிக்குக் காரணமாகிறது.
இதுவே காலம் செல்லச்செல்ல முதியோரை மதிக்காத ஒருநிலையை ஏற்பட வைக்கிறது. முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு ஊறு அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அவமதிப்புகள் பலவிதம்
மனம் சார்ந்தது:
வெளியில் கூட்டுக் குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் மனதளவில் காயப்படுத்துதல்.
வாய்மொழி சார்ந்தது:
வீட்டில் இருக்கும் முதியோர்களை அடிக்கடி திட்டுவது அல்லது அவர்களிடம் சண்டை போடுவது.
பொருள் சார்ந்தது:
காசோலையில் பொய் கையெழுத்திட்டுப் பணம் எடுப்பது. உயில் எழுதும்படி வற்புறுத்துதல். உடல்சார்ந்தது: மது போதையில் முதியோரிடம் பணம் கேட்டுத் துன்புறுத்துவது மற்றும் அடிப்பது.
Click to Read: நாளைய முதியோர்களே… உங்களுடன் ஒரு நிமிடம்!
முதுமையில் யாரெல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்?
- எந்த வருமானமோ, சொத்தோ இல்லாமல் இளைஞர்களைச் சார்ந்திருப்பவர்கள்
- ஒரே குழந்தையைப் பெற்ற முதியோர்கள்
- நாள்பட்ட நோயால் படுத்த படுக்கையில் கிடக்கும் முதியோர்கள். உ.ம்: மறதி நோய், பக்கவாதம், உதறுவாதம்
- தங்களுடைய எல்லாத் தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் முதியோர்கள்
- பெரியவர்களிடமிருந்து மாதாமாதம் பணம் வரும் வரை அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அது நின்றதும் அவர்களின் நிலை ஒரு ஆறாம் விரலாக ஆகிவிடுகிறது.
முதியோர்கள் யாரால் அவமதிக்கப்படுகிறார்கள்?
- முதியோர்கள் தொடர்ந்து வீட்டிலேயே நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது இடவசதி மற்றும் நிதி வசதிக் குறைவினால் அவமதிக்கப்படுகிறார்கள்.
- முதியோர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் போது அவர்களைப் பார்த்துக்கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். நிதி வசதியும் குறையும்.
- சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இதன் விளைவாக முதியோர்களிடம் மன இறுக்கத்தை உண்டாக்கும் செயல்க ளி ல் ஈடுபடுபவர்கள்.
- மது மற்றும் மருந்துக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள்.
- முதியோர்களின் சொத்துக்காக ஆசைப்பட்டுப் பொய்யாக அவர்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்கள்.
Click to Watch: முதியோர் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
என்னதான் தீர்வு?
- வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுடன் சமூகநலத் துறையின் மூலமாகவும், தன்னார்வத் தொண்டர்கள் மூலமாகவும் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். முடிந்தளவிற்கு அவர்களுக்கு வேலை பெற்றுத்தர உதவ வேண்டும்.
- விருப்பமுள்ள படித்த இளைஞர்களுக்கு வங்கியின் மூலம் நிதி உதவி பெற உதவ வேண்டும்.
- மதுப்பழக்க ம் உள்ள இளைஞர்களுக்கு, மருத்துவமனைக்குச் சென்று தக்க சிகிச்சை பெற உதவ வேண்டும். குடிப்பழக்கத்தைக் கைவிட உளவியல் நிபுணர்கள் மூலம் இளைஞர்களுக்கு இலவச ஆலோசனை வழங்க வேண்டும்.
- முதியோரை அவமதித்தல் நிதி வசதி படைத்த பணக்காரக் குடும்பங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தவிர்க்க முதியோர்கள், நல்ல குடும்பச் சூழ்நிலையிருக்கும் பொழு தே உயி ல் எழுதி வைத்துவிடுவது நல்லது.
- மேலும் பொய் கையெழுத்தை யார் யார் இடுவார்கள் என்பதை ஓரளவிற்கு தெரிந்துகொண்டு வங்கிமேலாள ருக்கு இது ப ற் றி த் தெரிவித்துவிட்டால் மேலாளர் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்.
- நோயுற்று, தொடர் சிகிச்சை பெறும் முதியோர்க ளின் இல்லங்களுக்கு மாதத்திற்கு ஒருமு றை அரசாங்கமேநேரடியாகச் சென்று மருந்துகளை இலவசமாகக் கொடுக்கலாம்.
- அவர்களுக்குத் தேவையான கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட் மற்றும் கைத்தடி போன்ற உபகரணங்களை இலவசமாகக் கொடுக்க அரசு முன்வரலாம்.
- முதியோர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டித் தேசிய அளவில் ‘பத்ம விருது’க்கு நிகரான விருதினை வழங்க ஏற்பாடு செய்யலாம். இது இளைஞ ர்களிடையே முதியோரை மதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஊட்டப் பெரிதும் உதவும்.
- ‘முதியோரை மதித்தல் ’ பற்றிய கட்டுரைகளைப் பள்ளிப் பாடநூலில் இடம் பெறச் செய்யலாம்.
- ஐக்கிய நாடுகள் சபை, முதியோர்களின் கொடுமைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை ‘முதியோர்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஊட்டும்’ நாளாக 2006-ம் ஆண்டிலிருந்து அனுசரிக்கிறது.
- எல்லாப் பள்ளி மாணவ,– மாணவியரும் ‘முதியோர் அவமதித்தலை’ எதிர்த்து ஜூன் 15-ம் தேதி உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.
- உறுதிமொழியை வருடத்திற்கு ஒருநாள் மட்டிலு ம் எடுத்துக்கொண்டால் போதாது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் அறக்கட்டளை 2017, 2018, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் ஆணையைப் பெற்றுத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளி மாணவ, மாணவிகளையும் ஜூன் 15-ம் தேதி உறுதிமொழி மற்றும் மனித சங்கிலி நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளது.
‘முதியோரை மதிப்போம் ’ என்கிற குறுநூலானது அறக்கட்டளை சார்பில் 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் ‘முதியோரை அவமதித்தல்’ பற்றிய குறும்படம் ஒன்றையும் தயாரித்து அவ்வப்போது இளைய சமுதாயத்தினருக்கு ஒளிபரப்பி வருகிறது.
இதைப்போல மற்ற தொண்டு நிறுவனங்களும் செயலில் ஈடுபடலாம். எங்களைத் தொடர்புகொண்டால் வேண்டிய தகவல்களைக் கொடுத்து உதவுவோம் (போன்: 99949 02173).
இளைய சமுதாயத்தினரை, முதியோரை மதிக்கச் செய்வதில் ஒருசில வாரங்களிலோ அ ல்ல து மாதங்களிலோ மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.
மேற்கண்ட வழிமுறைகளைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கடைப்பிடிப்பதினால் வருங்காலச் சமுதாயம் ‘முதியோரை மதிக்கும்’ சமுதாயமாக மாறும் என்பது நிச்சயம்!