உடற்பயிற்சியின் மூலம் நாம் பல உடல் ரீதியான நன்மைகளை அடைகின்றோம் என்பதை நாம் நன்கு அறிவோம்.
அதைப் போன்று நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும் உடல் பயிற்சிகள் உள்ளன; அதனைச் செய்யும் போது ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று விளக்கம் அளிக்கிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள்.
நுரையீரல் மூச்சுப் பயிற்சிகள் (Breathing Techniques for Lung)
நுரையீரல் மூச்சுப் பயிற்சிகள் நுரையீரல் மறுவாழ்வு (Pulmonary Rehabilitation) என்று அழைக்கப்படுகிறது.
நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள், நுரையீரல் சுருங்கி உள்ளவர்கள் ஆகியவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க, வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த கீழ்க்கண்ட நுரையீரல் மூச்சுப் பயிற்சிகள் பின்பற்றப்படுகின்றன.
அவை முறையே,
- சுவாச பிசியோதெரபி (Respiratory Physiotherapy)
- நுரையீரல் செயல்பாடு (Lung Function)
- ஊக்க ஸ்பைரோமெட்ரி (Incentive Spirometry)
- உதரவிதான உடற்பயிற்சி (Diaphragmatic Exercise)
- மார்பு வால்வுத் தசைகள் (Chest Valve Muscles)
- பிராணாயாமம் (Pranayama)
- மார்பு பிசியோதெரபி (Chest Physiotherapy)
- சுவாசப் பயிற்சிகள் (Breathing Exercises)
- சுவாச நுட்பங்கள்(Breathing Techniques) போன்றவை…

ஊக்க ஸ்பைரோமெட்ரி (Incentive Spirometry) பயிற்சியின் செய்முறை
இப்பரிசோதனையில் மூன்று வண்ணப் பந்துகள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் இருக்கும். அதில் ஒரு குழலும் இணைக்கப்பட்டு இருக்கும்.
நன்கு காற்றை இழுத்துக் குழலின் மூலம் ஊதும் போது மூன்று வண்ணப் பந்துகளும் மேலே எழும்பும். பந்து எழும் நிலையைப் பொறுத்து ஒருவரின் நுரையீரல் செயல்திறனை அறியலாம்.
READ ALSO: திடீர் கால் வலியா? இந்த நோயால் கூட இருக்கலாம்?
அதன் அடிப்படையில் நுரையீரல் செயல்திறனை மேம்படுத்த மேலும் பல மூச்சுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த மூச்சுப் பயிற்சிகளைக் காலை மற்றும் மாலை அரை மணி நேரம் செய்ய வேண்டும். இவ்வாறு நுரையீரல் மூச்சுப் பயிற்சியின் மூலம் நுரையீரலில் ஆக்சிஜன் தக்க வைக்கும் தன்மை அதிகரிக்கும். நுரையீரல் செயல்திறன் மேம்பட்டு, வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
‘சுவாசம்’ அனிச்சைச் செயல் அல்ல. இருப்பினும் அனிச்சைச் செயல் போன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை நுரையீரல் ஆரோக்கியமாய் இருக்கும் வரை மட்டுமே!
சிந்தித்து எச்சரிக்கையோடு செயல்பாடுவோம். மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வோம். இயல்பான சுவாசத்தை அனுபவிப்போம்.
கட்டுரையாளர்
