Homeஉடல் நலம்முதியோர் நலனில் செவிலியரின் பணி!

முதியோர் நலனில் செவிலியரின் பணி!

முதியோரை வயது முதிர்ந்த குழந்தைகள் என்று எண்ண வேண்டும். ஆகவே இவர்களைக் குழந்தைகளைக் கவனிப்பது போல கவனித்துக் கொள்ள வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைக் கவனிப்பதற்கு எப்படி ஒரு பயிற்சி பெற்ற செவிலியர் தேவையோ, அதைப் போலவே நோய்வாய்ப்பட்ட முதியோரைக் கவனிப்பதற்கும், சிறந்த முறையில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

முதியோருக்குச் செவிலியர் சேவை என்பது முதுமையையும், அவர்களுடைய நோய் குறித்த பிரச்சனைகளையும் கூர்ந்து கவனித்து சிறப்பாக செய்வதாகும்.

முதியோரின் மனநிலை, உடல்நிலை, சமுதாயநிலை, பொழுதுபோக்கு இவை அனைத்துமே செவிலியரின் சேவையின் ஒரு பங்கு ஆகும்.

முதியோருக்கு செவிலியர் பணி என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமல்லாம ல் , நலமாக இருக்கும் முதியோருக்கும் பயன்படத்தக்கதாகும்.

இன்று செவிலியர் பணி இன்றியமையாத ஒன்றாகவும், மிக உயர்ந்த செல்வாக்கு உள்ள ஒரு பணியாகவும் மதிக்கப்படுகிறது.

செவிலியராக இருப்பதற்கு சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். அதிலும் நோய்வாய்ப்பட்ட முதியோரைக் கவனிப்பதற்கு சகிப்புத்தன்மையுடன் கூடிய பொறுமையும் நிதானமும் தேவை.

முதியோர் இரண்டாவது பிறவி எடுக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், அவர்களின் உடல் சா ர்ந்த நோய்களைக் கவனித்துக் கொள்வது மட்டும் அல்லாமல், அவர்களின் மனத்திற்கும் ஆறுதலாக இருத்தல் வேண்டும்.

முதியோருக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உடல்நலம் பாதுகாத்தல் குறித்தும், நோய் தடுக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும்.

Click to Read: ஜனனமும் மரணமும் புதியது இல்லை!

நாள்தோறும் நோயாளியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து மருத்துவரின் கண்காணிப்புக்கு கொண்டுவர வேண்டும்.

முதியோருக்குத் தரவேண்டிய சிகிச்சை முறையை அவர்களுடன் அனுசரித்து, தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

செவிலியர் தனது அன்றாட வேலைகளில், சமுதாய நிலையிலும், பண்பாட்டிலும், மத நம்பிக்கைகளிலும், வயதிலும் பல்வேறுபட்ட மக்களை சந்திக்க வேண்டியுள்ளது.

முதியோரின் நம்பிக்கையையும் , ஒத்துழைப்பையும் பெற வேண்டுமானால், இவ்வேறுபாடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

முதியவர்களை நல்ல மகிழ்ச்சிகரமான நிலையில் வைக்க வேண்டியது செவிலியரின் கடமையாகும்.

கடந்த காலத்தில் அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய கடமைகளையும், வயதாகி விட்டதால் குறைந்து வரும் அவர்களின் அறிவுத் திறன்களையும் நினைத்து அவர்களைப் பொறுமையுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டியது அவசியமாகும்.

முதியோரின் ஆயுளை அதிகப்படுத்த உதவுவது மட்டும் செவிலியரின் நோக்கமல்ல. அவர்கள் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு உதவ வேண்டும்.

Click to Watch: அஜீரணக் கோளாறுக்கு இதுவும் ஒரு காரணமா?

அவர்களின் இறுதிக்காலம் தொல்லைகள் அதிகமின்றி மன அமைதியுடன் இருப்பதற்கு செவிலியரின் பணி மிகவும் இன்றியமையாதது ஆகும்.

நன்றி

திருமதி கௌசல்யாசாரதி, செவிலியர் கண்காணிப்பாளர் எழுதிய ‘முதியோர் நலனில் செவிலியர் பணி’ நூலிருந்து…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read