வெயிலின் தாக்கத்தில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், குழந்தைகளும் வயதானவர்களுமே. முதியோர்களுக்கு அடிக்கடி நீர் சுருக்கு ஏற்படும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் நீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில சமயம் அடிவயிற்றில் வலி இருக்கும்.
இது எதனால் ஏற்படுகிறது?
வெளிப்புற வெயில் சூட்டினாலும், போதுமான நீர் அருந்தாமையாலும், சிறுநீரை அதிக நேரம் அடக்குவதாலும் ஏற்படும்.
சித்த மருத்துவத்தில் நீர் சுருக்கு நீங்க சாத்துக்கொடி சாறு, ஆரஞ்சு சாறு கலந்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க எரிச்சல் தணியும்.
வாழைத் தண்டு சாறு 30 மி.லி., குடிக்கலாம்.
நீர்முள்ளி கஷாயம் 30 மி.லி., குடிக்கலாம்.
நெருஞ்சி குடிநீர் இருவேளை குடிக்க சிறுநீர்க்கடுப்பு குறையும்.
சிலாசத்து பற்பமாத்திரை, வெடியுப்பு சுண்ணம், வெங்கார பற்பம் , குக்கி ல் பற்பமாத்திரை, ஜலோதாரி மணி போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.
Click to Read: நாளைய முதியோர்களே… உங்களுடன் ஒரு நிமிடம்!
Click to Watch: முதியோரை பாடுபடுத்தும் பழக்கவழக்கங்கள்
சர்க்கரைநோய் இல்லாதவர்கள் இளநீர், தர்ப்பூசணி உட்கொள்ளலாம்.
சர்க்கரைநோயாளிகள் உடல் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. மேலும், மோர் நிறைய குடிக்கலாம்.
முள்ளங்கியை வேகவைத்து அந்த நீரை வடிகட்டிக் குடிக்க நீர்க்கடுப்பு குறையும்.
மேலும், சுரைக்காய், பீர்க்கு போன்ற நீர்க் காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, சிறுநீர் பெருகும்; நீர் சுருக்கு குறையும்.
வெள்ளைப் பூசணிக்காயை எடுத்து அதன் சதைப் பகுதியை அரைத்து வடிகட்டிக் குடிக்க, நீர் சுருக்கு குறையும். சிறுநீர் நன்கு கழியும். உடல் சூடும் தணியும்.
எந்த வேலையில் இருந்தாலும், நிறைய நீர் அருந்த வேண்டும்.