நுரையீரல் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்வது எப்படி? அதற்கான டெஸ்டுகள் என்னென்ன என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
நுரையீரல் ஆரோகியத்தை அறிந்துகொள்ள அடிப்படையாக செஸ்ட் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். நுரையீரலின் உடற்கூறியல் எப்படி இருக்கிறது? நல்ல நிலையில் இருக்கிறதா? அல்லது ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? இவற்றையெல்லாம் ஒரு நுரையீரலின் அமைப்பை (வடிவத்தை) வைத்து கவனிப்போம்.
இது முக்கியமான பரிசோதனையாகும். இதன் மூலம் நிமோனியா? காச நோய்? புற்றுநோய்? மூச்சுக்குழல் விரிந்திருக்கிறதா? COPD நோய்? இதை செஸ்ட் எக்ஸ்ரே மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நுரையீரலின் செயல்பாடு திறன் கண்டறிய PFT (Pulmonary Function Test) அதாவது (Spirometry) என்ற பரிசோதனை இருக்கிறது. இதன் மூலமாக, ஒருவருக்கு நுரையீரலில் மூச்சுக்குழல் சுருக்க நோய் (Obstructive Disease) அல்லது நுரையீரல் நெருக்க நோய் (Restrictive Disease) என இந்த இரண்டு நோய்களில் எது இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க முடியும்.
Read Also: எந்தெந்த காரணங்களால் ஆஸ்துமா வரலாம்?
ஆஸ்துமா, COPD நோய் இருக்கிறதா, அல்லது காச நோய். ஃபைப்ரோஸிஸ் போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்பதை நுரையீரல் செயல்பாடுகளை வைத்துக் கண்டறிய முடியும். பரிசோதனையில் இதைத் தாண்டி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சிடி ஸ்கேன் பரிசோதனையின் மூலம் புற்றுநோயா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.
மேற்கொண்டு அதை உறுதி செய்ய மூச்சுக் குழல் உள்நோக்கு (Bronchoscopy) பரிசோதனை செய்ய் வேண்டும். இந்தப் பரிசோதனை நுரையீரல் எண்டோஸ்கோபி வகையை சார்ந்ததாகும்.

நுரையீரல் உள்நோக்கு பரிசோதனையின் மூலம் நுரையீரலில் எந்த இடத்தில் புற்றுநோய் போன்று கட்டிகள் தென்பட்டாலும், அதைத் தெள்ளத் தெளிவாக பயாப்சி (திசு பரிசோதனை) மூலம் அவை காச நோயா, புற்றுநோயா அல்லது சாதாரண கட்டியா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
Read Also: எல்லோருக்கும் குரல் எவ்வளவு முக்கியம்?
ஆகவே, நுரையீரல் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ள செஸ்ட் எக்ஸ்ரே, PFT (Pulmonary Function Test), சிடி ஸ்கேன் பரிசோதனை, மூச்சுக் குழல் உள்நோக்கு (Bronchoscopy) பரிசோதனை செய்ய வேண்டும்.
இது மட்டுமல்லாமல் அடிப்படையான ரத்தப் பரிசோதனை, சளி பரிசோதனை (Sputum Test) செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் அலர்ஜி, நோய்த்தொற்று இருக்கிறதா என்பதையும் கண்டறிய முடியும். இவையே நுரையீரல் நலம் காக்க உதவும் அடிப்படையான பரிசோதனைகள் ஆகும்.
கட்டுரையாளர்
