Homeஉடல் நலம்வாகனம் ஓட்டும்போது ஏன் தூக்கம் வருகிறது?

வாகனம் ஓட்டும்போது ஏன் தூக்கம் வருகிறது?

‘உறக்கம்’ இது வந்தாலும் சிக்கல்; வரவில்லை என்றாலும் சிக்கல்! உறக்கம் வந்தால் ஏன் சிக்கல் என்பது தானே உங்கள் ஐயம்! வாகனம் ஓட்டும் போது வந்தாலும், தேர்வறையில் வந்தாலும், படிக்கும் போது வந்தாலும் சிக்கல் தானே?

அதிலும் குறிப்பாக வாகனம் ஓட்டும் போது வந்தால் சிக்கல் நமக்கு மட்டுமல்ல நம்மோடு சாலையில் பயணிக்கும் அனைவருக்குமே சிக்கல் அல்லவா?

ஆனால், நாம் யாரும் வேண்டுமென்றே இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உறங்குவது இல்லையே! மேலும் அவ்வாறு உறங்கும் வேளையில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பதும் நாம் அறிந்த ஒன்று தானே!

READ ALSO: இந்தியாவும், இதய நோயும்!

பிறகு ஏன் இந்தத் தூக்கம் அப்பொழுதுகளில் வருகிறது? நாம் ஏன் உறங்குகிறோம்? இதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் கூறுகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள். அதனை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்!

வாகனம் ஓட்டும் போது உறக்கமா??

சிலர் வாகனம் ஓட்டும் போது உறங்குவார்கள். இல்லையேல் உறங்கிக் கொண்டே வாகனம் ஓட்டுவர்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

மிகவும் இயல்பான காரணம் ஓட்டுநர்கள் முதல் நாள் நன்றாக உறங்கவில்லை என்றாலும், உடல் சோர்வின் காரணமாக வாகனம் ஓட்டும் போது உறங்கிவிடுவார்கள். இல்லையேல் அவர்களுக்குத் தூக்கம் சார்ந்த நோய்கள் இருக்கலாம்.

READ ALSO: முதியோருக்கு தாழ்வு மனப்பான்மையா?

அதாவது உறக்கத்தில் சுவாச அடைப்பு நோய், உறக்கமின்மை நோய்ப் போன்றவை. அதனால் வாகனம் ஓட்டும் போது உறக்கம் உங்களையும் அறியாமல் வந்தாலும், நீங்களே உறங்கினாலும் மருத்துவரை அணுகி உறக்கம் சார்ந்த நோய்கள் ஏதேனும் உங்களுக்கு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை முறைகளைப் பெற்றுக் குணமடையுங்கள்.

உறக்கம் வரமாவதும், சாபமாவதும் அது நிகழும் சூழல் மற்றும் இடத்தைப் பொருத்து அமைகிறது! இறைவன் படைப்பில் எதுவுமே சாபம் அல்ல!! எனவே சாபத்தையும் வரமாக்குவோம் முறையான சிகிச்சையைப் பெற்று!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read