Homeஉடல் நலம்Dental Implant பல்லுக்கு நல்லதா? 

Dental Implant பல்லுக்கு நல்லதா? 

‘முகம்’ ஒருவரின் அடையாளம். அதனால் தான் அந்த முகத்தை அழகாக வைத்துக் கொள்ளப் பலவற்றை நாம் செய்கின்றோம்.

இப்படி நம் அடையாளமான முகத்திற்கு அழகான வடிவத்தைக் கொடுப்பதில் மிக முக்கியப் பங்கை வகிப்பது பற்கள். அந்தப் பற்கள் இல்லையென்றால் முகத்தின் வடிவை மட்டும் நாம் இழப்பதில்லை. தன்னம்பிக்கையும் இழக்கிறோம்.

இப்படி இழந்தத் தன்னம்பிக்கையையும், முக வடிவையும் மீண்டும் பெறலாம் டாக்டர். எம். வீரபாகு BDS, MDS., முகம், வாய் மற்றும் தாடை அறுவைச் சிகிச்சை நிபுணர் அவர்களின் வழிகாட்டல் மூலம்.

அனைவருக்கும் முப்பத்தி இரண்டு பற்கள் உள்ளன என்பது நாம் அறிந்ததே. பல் சொத்தை, பல்லைச் சுற்றியுள்ள எலும்புகள் வலுவாக இல்லாமை அல்லது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நேரிடும் விபத்து போன்ற பல காரணங்களால் நாம் பற்களை இழக்கக் கூடிய சூழல் உருவாகிறது.

எனவே மாதம் தோறும் இல்லாவிடினும் வருடத்திற்கு இரண்டு முறையாவது பல் மருத்துவரை அணுகிப் பற்களைப் பரிசோதித்துப் பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் அதற்கு உரியச் சிகிச்சையை எடுத்துக்கொண்டு பற்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வயதின் காரணமாக உடலில் ஏற்படும் சில மாறுதல்களால் நாம் இயல்பாகவே பற்களை இழக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இப்படிப் பற்களை இழக்கும் போது ஒருகாலக் கட்டத்திற்கு மேல் நாம் உட்கொள்ளும் உணவுகளை முறையாகக் கடித்து, மென்று, அரைத்து உண்ண முடியாது.

READ ALSO: நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப்பயிற்சிகள்

இதன் விளைவாகச் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். எனவே பற்கள் மிக, மிக முக்கியம். அதனிலும் முக்கியம் முன்னெச்சரிக்கையோடு பற்களைப் பாதுகாத்தல். எனினும் பற்களை நாம் இழக்கும் போது அதனை மீண்டும் எவ்வாறு பெறலாம் என்ற மாற்றுச் சிகிச்சை முறைகளை இங்கே காணலாம்.

பல் உள்வைப்பு (Dental Implant)

முன்னர் பற்களை இழந்தவர்களுக்கு மாற்றுச் சிகிச்சையாகச் செயற்கைப் பல் தொகுப்பு (Tooth set ) அளிக்கப்பட்டது. மற்றும் அருகில் உள்ள பற்களைத் தேய்த்துப் பாலம் (Bridge) போன்று செயற்கைப் பல்லானது வடிவமைக்கப்பட்டது.

ஆனால் இன்று நவீனச் சிகிச்சை முறை வளர்ச்சியின் காரணமாக டைட்டானியம் (Titanium) என்ற உலோகத்தால் உருவான திருகை (Screw) ஈறு உள்ள எலும்பில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி இயற்கையாய் உருவான பற்களைப் போன்றே செயற்கைப் பற்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இம்முறைக்குப் பல் உள்வைப்பு (Dental Implant ) என்று பெயர். இப்படிப் பொருத்தப்பட்ட திருகானது மூன்று அல்லது நான்கு மாதங்களில் நமது பற்களின் வேரைப் போன்றே உறுதியாகி விடும். இந்த முறையில் ஒன்று முதல் பல பற்களைப் பொருத்தலாம்.

பல் செட் அணிந்து அல்லது உணவுகளைக் கடித்து உண்ண இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு இம்முறையில் மேல் மற்றும் கீழ் எலும்பில் ஆறு திருகைப் பொருத்திப் பற்களை அமைந்து அவர்கள் உணவைக் கடித்து, மென்று உண்ண வழிச் செய்யலாம்.

மேலும் இதனால் எந்த விதமான பக்கம் விளைவுகளும் ஏற்படாது. காரணம் இந்த ‘டைட்டானியம்’ உலோகமானது ‘வணிக ரீதியாகத் தூய்மையான தரம் ஐந்து டைட்டானியம் (Commercially Pure Grade Five Titanium). எனவே இதன் உயர்த் தரத்தின் காரணமாக உடலே இதனை அதன் ஒரு பாகமாகக் கருதி அதனுடன் அதனை ஏற்றுக்கொள்கிறது.

READ ALSO: திடீர் கால் வலியா? இந்த நோயால் கூட இருக்கலாம்?

பல் உள்வைப்பு (Dental Implant) நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள், பல் எலும்பு வலுவிழந்தவர்கள் போன்றவர்களுக்குப் பல் செட் எளிதாகக் கழன்று விடும். ஆனால் பல் உள்வைப்பு (Dental Implant) முறையில் அவ்வாறு நிகழாது‌. இந்த முறையின் மூலம் நிரந்தரமான பல் அமைப்பைப் போன்றே பற்களைப் பெறலாம்.

உணவுகளைச் சதுர அங்குலத்திற்கு 400 பவுண்டுகள் (400 Pounds for Square Inch) வலிமையுடன் கடித்து, மென்று, சுவைத்து உண்ணலாம். இதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

‘ஆளும், வேலும் பல்லுக்குறுதி; பல்போனால் சொல் போச்சு’ என்பது தமிழ்ப் பழமொழி. எனவே பற்களை இழந்து இருந்தாலும் பல் உள்வைப்பு (Dental Implant) முறை மூலம் மீண்டும் பற்களைப் உறுதியாகப் பெற்று, சொல் போகாமல் வாழ்வோம்.

பல்’ வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதைச் சிறுவயதில் பற்களை நாம் இழக்கும் போது அறிந்து இருப்போம் அல்லவா! அஃது இப்பொழுது ஆனந்த நினைவு. காரணம் இழந்ததை நாம் மீண்டும் பெற்றுவிட்டோம் ஆதலால். இனியும் அதே ஆனந்தத்தை அடைவோம் பல் உள்வைப்பு (Dental Implant) முறை மூலம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read