சில வகை உணவுப் பொருட்களை ஒன்றாக கலந்து சாப்பிடும்போது ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
சரிவிகித உணவான கார்போஹட்ரேட், புரோட்டீன், கொழுப்புச்சத்து மூன்றும் தேவையான அளவு எடுத்து கொள்வதே Balanced diet என்று சொல்கிறோம்.
இதில் எதிர் உணவு என்றால் என்ன? உணவில் கூட எதிரி இருக்கிறதா? என்றால், உண்டு என்று தான் கூறவேண்டும்.
சில உணவுப் பொருட்கள் தனியாகச் சாப்பிடும்போது நல்ல பலனை கொடுக்கும். அதே உணவு பொருள் வேறு வகை உணவுப் பொருளோடு சேர்த்து சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படும்.
எடுத்துக்காட்டாக மீனுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனென்றால் ஜீரண சக்தி குறையும்.
நெய்யையும் தேனையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டக் கூடாது.
ஏனென்றால் நெய்யில் உள்ள fatty acid chain மற்றும் தேனில் உள்ள சர்க்கரையும் ஒன்றாக சேர்த்து செரிக்கும் சக்தி நம் வயிற்று நொதிகளுக்கு இல்லை.
Click To Read: வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க!
தயிர், மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது. இறைச்சியையு ம் விளக்கெண்ணையையும் சேர்த்து சமைக்க கூடாது.
கரும்பு மென்று சாப்பிட்டவுடன் நீர் அருந்த கூடாது. அகத்திக்கீரையையும், ஆல்கஹாலையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது.
சில வகைபொருட்கள் எளிதில் செரிக்க வேண்டுமாயின் இப்படி சாப்பிடலாம்!
வேர்கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் குறைய வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
பலா பழம் அதிகம் சாப்பிடும்போது தேன் கலந்து சாப்பிட எளிதில் செரிப்பதுடன் வாயுத் தொல்லை ஏற்படாது.
கரும்புச் சாறு குடிக்கும் போது அதனுடன் எலுமிச்சை, ஏலம், சுக்கு கலந்து குடித்தால் ஜீரண சக்தி அதிகம் ஆகும்.
Click To Watch: முதியோர் எப்பவும் பதட்டாமா இருக்க காரணம்
மாம்பழம் அதிகம் சாப்பிட்டு பேதியாகாமல் இருக்க மாங்கொட்டையை சுட்டு அதன் உள் இருக்கும் பருப்பை சாப்பிட மாம்பழத்தால் ஏற்பட்ட சூடு தணியும்.
இப்படி எதிர் உணவு ஒன்று அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல உணவுகளை எடுத்துக் கொண்டால் உணவும் செரிக்கும். அதன் முழு பலன்களும் கிடைக்கும்.