Homeஉடல் நலம்நுரையீரல் அலர்ஜி வருவது எதனால்?

நுரையீரல் அலர்ஜி வருவது எதனால்?

தோலில் ஒவ்வாமை, தலையில் ஒவ்வாமை, நகத்தில் ஒவ்வாமை என்று கூறும் பலவகையான ஒவ்வாமைகளில் முக்கியமான மற்றும் பாதிப்புகள் அதிகம் நிறைந்த ஒவ்வாமை மாசினால் ஏற்படும் நுரையீரல் ஒவ்வாமையே!

இதுகுறித்து நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள் கூறும் தகவல்களை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்!

நுரையீரலில் ஒவ்வாமை

பொதுவாக நுரையீரலில் ஒவ்வாமை ஏற்படக் காரணம் மாசுகளே! அது வீட்டின் உள்ளேவும் நிகழலாம்!!

வெளியிலும் நிகழலாம்!!! இப்படி மாசினால் ஏற்படக்கூடிய நுரையீரல் ஒவ்வாமைகளை மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை ஆஸ்துமா என்று வகைப்படுத்தலாம்.

READ ALSO: சைனஸ் & சைனசிடிஸ் என்ன வித்தியாசம்?

வீட்டின் உள்ளே உள்ள ஒவ்வாமை மாசுகள்

சமையலறைப் புகை, ஊதுபத்திப் புகை, சாம்பிராணிப் புகை, வீட்டினைத் தூய்மைச் செய்யும்போது ஏற்படும் தூசுகள், மாசுகள், ஒட்டடை மாசுகள், படுக்கையில் உள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், மாசுகள் போன்ற இன்னும் பல.

வீட்டின் வெளியில் ஒவ்வாமை மாசுகள்

சாலையில் உள்ள தூசுகள், மாசுகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைப் போன்ற பல.

ஒவ்வாமையால் ஏற்படும் நுரையீரல் நோய்கள்

நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, ஆஸ்துமா அழற்சி, நுரையீரல் மூச்சுக்குழல் அழற்சி நோய் (COPD) போன்றவை ஒவ்வாமையால் ஏற்படும் நுரையீரல் நோய்கள். நாள்பட்ட இந்நோய்களால் நுரையீரலில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது!

தற்காப்பு நடவடிக்கைகள்:

இத்தகைய ஒவ்வாமை நோய்களிலிருந்து நமது நுரையீரலைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டினைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டினைத் தூய்மைச் செய்யும்போது முகக் கவசம் அணிந்துத் தூய்மை செய்வது சிறந்தது.

மேலும் ஏற்கனவே இத்தகைய நுரையீரல் நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இத்தகைய தூய்மைப் பணிகளில் ஈடுபடாமல் இருப்பது சால சிறந்தது. ‘புகை நமக்குப் பகை’ என்பார்கள் எனவே புகையிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மலர்களில் இருந்து வரக்கூடிய மகரந்தத் தூள் கூட ஒரு வகையான மாசாகக் கருதப்படுகிறது. எனவே அதிலிருந்தும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவத் தீர்வுகள்

மேற்கூறிய நுரையீரல் ஒவ்வாமை நோயிக்கு ஆளானவர்களுக்கென்று பிரத்தியேகமாக உள்ளப் பரிசோதனைகளைச் செய்து, அவர்கள் எவ்வகையான ஒவ்வாமை நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதைக் கண்டறியலாம்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய மாசிலிருந்து தற்காத்துக் கொண்டு குணமடையலாம். மேலும் நோயானது தீவிரம் அடையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை முறைகள் மூலமும் குணமடையலாம்.

READ ALSO: நிமோனியா வராமல் இருக்க ஒரே வழி!

அத்தகைய சிகிச்சைகளை ஊசி மூலமும், மாத்திரைகள் மூலமும் எடுத்துக்கொள்ளலாம்.

‘நுரையீரல்’ நாம் உயிர் வாழத் தேவையான அடிப்படை உள் உறுப்புகளில் ஒன்று என்றால் அது மிகையாகாது. இதயம் சிறப்பாய்ச் செயல்படவும் அடிப்படைக் காரணமாக உள்ள இந்த நுரையீரலைப் பழுதின்றியும், ஒவ்வாமையிலிருந்தும் பாதுகாப்பாய்ப் பார்த்துக் கொள்வோம்! சுவாச நோய்கள் ஏதுமின்றி ஆரோக்கியமாய் வாழ்வோம்!!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read