காது மெழுகு (Ear Wax) அழுக்கில்லையா? காதின் அழுக்கு என்று நாம் கூறும் மெழுகு காதின் பாதுகாப்பா? அப்படியானால் அதனால் ஏன் வலி ஏற்படுகிறது? இதற்கான காரணம் தான் என்ன? தீர்வு என்ன?
இது போன்ற வியப்புகள் நிறைந்த வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்கிறார் காது, மூக்குத் தொண்டை மருத்துவர் எ.சுதா அவர்கள். அதனை இங்க அறிந்துகொள்ளலாமா?

காதில் மெழுகு உருவாக்கம்
காதின் வெளிப்புறப் தோலில் (வெளிக் காது) உள்ளச் சீபம் சுரப்பபியில் உருவாகும் திரவம் காதினுள் சென்று இறுக்கம் அடைந்துத் திட நிலைக்கு மாறுவதே காது மெழுகு.
READ ALSO: நுரையீரல் அலர்ஜி வருவது எதனால்?
காது மெழுகின் நன்மைகள்
மெழுகு, காதினுள் செல்லக் கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்தும், மாசு, தூசு என்று காதினைப் பாதிக்கக் கூடியவற்றிலிருந்தும் காதினைப் பாதுகாக்கக் கூடிய ஒரு கேடயமாகச் செயல்படும் ஒரு நோய்த் தடுப்பான்.
மேலும், காதின் ஜவ்வாது வளர்ச்சிதை மாற்றத்திற்கு உட்படும் போது சிதையும். அப்போது உருவாகும் தோல் வெளியேறும் போது காது குரும்பியும் அதனுடன் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிற நுண்ணுயிர்கள் மற்றும் மாசுகளையும் அதனுடனே சேர்ந்து வெளியேறி விடும்.

காதை பாதிக்கும் நம் செயல்கள்
இவ்வாறு வெளியேறும் காது மெழுகை அழுக்கு என்று எண்ணி அதனைத் தூய்மை செய்கிறோம் என்ற பெயரில் அதனை நாம் தூய்மைச் சாதனக் பொருட்களின் மூலம் முழுமையாக அகற்றி விடுகின்றோம். அதனால் காதின் உட்புறம் வரண்ட நிலையை அடைகிறது.
இந்த வரட்சி நிலையால் காதினுள் அரிப்பு ஏற்படுகிறது. அதனைச் சரிசெய்ய மேலும் நாம் எதையாவது கொண்டு காதினைக் குடையும் போதே காதில் பாதிப்பு ஏற்படுகிறது! இதனால் பூஞ்சைத் தொற்றுக் கூட ஏற்படும். அஃதுவே அதீத வலியைத் தரும்.
READ ALSO: சைனஸ் & சைனசிடிஸ் என்ன வித்தியாசம்?
எப்போது காது மெழுகைத் சுத்தம் செய்யலாம்?
இயல்பாய்த் தானாக வெளியேறும் மெழுகை ஈரத் துணிக் கொண்டு வெளியில் இருந்து துடைத்து எடுத்தாலே போதும். சிலவேளைகளில் குரும்பியானது அதிகமாக இறுகிய நிலையில் இருக்கும். இதனைத் ‘தாக்கத்திற்கு உள்ளான மெழுகு’ என்போம். இது பெரும்பாலும் முதிமையிலேயே நிகழும்.
இதனை நாமே நீக்குவதை விட, காது மருத்துவரின் உதவுயைப் பெறுவது சிறப்பு! காரணம் நாம் நீக்க முற்பட்டால் அதனை முழுமையாக நீங்க இயலாது; அத்துடன் அதன் இடத்தில் இருந்து இன்னும் உட்புறம் நாம் அதனைத் தள்ளி விடுவோம்; இதனால் அப்பகுதியின் தோலும் தாக்குதலுக்கு உள்ளாகிவிடும். இதன் விளைவாகவும் காது வலி உண்டாகும்.

காது பராமரிப்பு
காதினை பட்ஸ், ஊக்கு, முடி ஊசி போன்றவற்றைக் கொண்டு தூய்மைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் காது மருத்துவரை அணுக வேண்டும். இதுவே சிறந்த காது பாதுகாப்பு அணுகுமுறைகள்.
காது மட்டுமல்ல, காதில் தோன்றக்கூடிய குரும்பிக் கூட நமக்கு உதவக்கூடிய முக்கிய உறுப்பே! எனவே நமக்காக நம் உடலில் இறைவன் படைத்த அனைத்து உறுப்புகளும் நன்மைக்கே என்பதை உணர்ந்து, அதனை முறையாய்ப் பாதுகாத்து, பராமரித்து இன்பமாய் வாழ்வோம்!! வாழ்வில் ஆரோக்கியத்தையும் ஓர் அங்கமாக்குவோம்!!!
கட்டுரையாளர்
