உங்களுக்கு விழுங்குவதில் சிக்கல் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும். காரணத்தைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் உங்களை காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், செரிமானக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் (இரைப்பைக் குடலியல் நிபுணர்) அல்லது நரம்பு மண்டலத்தின் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் (நரம்பியல் நிபுணர்) ஆகியோரிடம் பரிந்துரைக்கலாம்.
எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?
- விழுங்குவதில் சிரமம் உள்ளது
- சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது இருமல் அல்லது மூச்சுத் திணறல்
- சாப்பிட்ட பிறகு தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற உணர்வு
- உணவு அல்லது பாலை மீண்டும் மேலே கொண்டு வருகிறது. சில சமயங்களில் மூக்கு வழியாக…
- சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது
இதையும் படிக்கலாமே: விழுங்குவதில் சிரமமா? இது டிஸ்ஃபேஜியா பிரச்னையாக இருக்கலாம்!
டிஸ்ஃபேஜியா பற்றி மருத்துவரிடம் நீங்கள் பகிர வேண்டிய தகவல்கள்
மன அழுத்தங்கள் அல்லது சமீபத்திய வாழ்க்கை மாற்றங்கள் உட்பட முக்கிய தனிப்பட்ட தகவல்கள், நீங்கள் எடுத்துக்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ், அளவுகள் உள்பட சில தகவல்கள்
டிஸ்ஃபேஜியா பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
- எனது அறிகுறிகளின் சாத்தியமான காரணம் என்ன?
- மற்ற சாத்தியமான காரணங்கள் என்ன?
- எனக்கு என்னென்ன சோதனைகள் தேவை?
- இந்த நிலை தற்காலிகமா அல்லது நீண்ட காலம் நீடிக்குமா?
- எனக்கு வேறு உடல்நிலைப் பாதிப்புகள் உள்ளன. நான் எப்படி அவற்றை ஒன்றாகச் சிறப்பாக நிர்வகிக்க முடியும்?
- எனது உணவை நான் கட்டுப்படுத்த வேண்டுமா?
இதையும் படிக்கலாமே: உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய டிஸ்ஃபேஜியாவின் வகைகளும், சிகிச்சைகளும்!
மருத்துவர் உங்களிடம் கேட்கக்கூடிய கேள்விகள்
- உங்கள் அறிகுறிகள் தொடர்ச்சியாக அல்லது அவ்வப்போது இருந்ததா?
- உங்கள் அறிகுறிகளை ஏதேனும் ஒரு விஷயம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறதா?
அப்படியானால், உங்கள் அறிகுறிகளை மோசமாக்குவது என்ன? உதாரணமாக, சில உணவுகளை விழுங்க கடினமாக உள்ளதா? - திடப்பொருட்கள், திரவங்கள் அல்லது இரண்டையும் விழுங்குவதில் உங்களுக்கு சிரமம் உள்ளதா?
- நீங்கள் விழுங்க முயற்சிக்கும் போது இருமல் அல்லது எதுக்களிப்பு ஏற்படுகிறதா?
- முதலில் திடப்பொருட்களை விழுங்குவதில் உங்களுக்கு சிரமம் இருந்ததா, அல்லது திரவங்களை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டதா?
- உணவை விழுங்கிய பிறகு மீண்டும் மேலே கொண்டு வருகிறீர்களா?
- நீங்கள் எப்போதாவது வாந்தி எடுத்தீர்களா அல்லது ரத்தம் அல்லது கறுப்புப் பொருள் வெளிவருகிறதா?
- நீங்கள் எடை இழந்துவிட்டீர்களா?
மருத்துவரைச் சந்திக்கும் வரை…
- உங்களுக்கு நெஞ்செரிச்சல் அல்லது GERD இருந்தால், சிறிய அளவுகளில் உண்ணவும்.
- சாப்பிட்ட உடன் படுப்பதைத் தவிர்க்கவும்.
- மருந்துச் சீட்டு இல்லாமல் நீங்கள் பெறக்கூடிய ஆன்டாக்சிட்கள் தற்காலிகமாக உதவக்கூடும்.
இதையும் படிக்கலாமே: டிஸ்பேஜியா பிரச்சனைக்கான அறுவை சிகிச்சையின் வகைகள்!
விழுங்குதலில் சிரமம் எனப்படும் டிஸ்பேஜியா பிரச்சனை குறித்த இந்த தொடர் இந்தக் கட்டுரையுடம் முடிவடைகிறது. டிஸ்பேஜியா குறித்த சந்தேகங்களுக்கும் சரி, டிஸ்பேஜியாவுக்கான சிகிச்சைகளுக்காகவும் சரி ENT Specialitst Dr. வித்தியாதரன் இருக்கிறார்.