Homeஉடல் நலம்உப்பு குறைவா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதா?

உப்பு குறைவா சாப்பிட்டா இதயத்துக்கு நல்லதா?

கை, கால்கள் செயல் இழந்து போனால் அவை மீண்டும் செயல்படத் தொடங்கப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதில் முக்கியமான ஒன்று உடற்பயிற்சிச் சிகிச்சை (physiotherapy). இவ்வாறு இதயம் செயலிழந்து போனால் நாம் எத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்?

இதனை விளக்குகிறார் இருதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

இருதயச் செயலிழப்புச் சிகிச்சையின் நான்கு தூண்கள் (4 Pillars of heart Treatments)

1.ஆஞ்சியோடென்சின் ஏற்பி-நெப்ரிலிசின் தடுப்பான்கள் (ARNI-Angiotensin Receptor-Neprilysin Inhibitors)

2. பீட்டா தடுப்பான்கள் (Beta Blockers)

3. மினரல்கார்டிகாய்டு ஏற்பி எதிரிகள் (MRA- Mineralocorticoid Receptor Antagonists)

4. க்ளிஃப்லோசின் -டபாக்லிஃப்ளோசின், எம்பாக்லிஃப்ளோசின் (Gliflozin -Dapagliflozin, Empagliflozin)

ஆஞ்சியோடென்சின் ஏற்பி-நெப்ரிலிசின் தடுப்பான்கள் (ARNI-Angiotensin Receptor-Neprilysin Inhibitors) மருந்துப் பல மருந்துகளின் கலவைகள் நிறைந்த மிகச்சிறந்த மருந்து.

இதனை வழங்க இயலாதவருக்கு அடுத்ததாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது

பீட்டா தடுப்பான்கள் (Beta Blockers).

இது இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, இதயத்துடிப்பைச் சமன் செய்வது, எதிர்பாரவிதமாக ஏற்படக்கூடிய மாரடைப்பைத் தடுப்பது போன்ற பல பணிகளைச் செய்து, பல வழி முறைகளில் மனித வாழ்வைப் பாதுகாக்கிறது.

பிறகு மினரல்கார்டிகாய்டு ஏற்பி எதிரிகள் (MRA- Mineralocorticoid Receptor Antagonists), க்ளிஃப்லோசின் -டபாக்லிஃப்ளோசின், எம்பாக்லிஃப்ளோசின் (Gliflozin -Dapagliflozin, Empagliflozin) மருந்துகள் வழங்கப்படுகின்றன.

READ ALSO: முக எலும்பு உடைந்தால் எந்த மருத்துவரை பார்க்கணும்?

இந்த நான்கு மருந்துகளுமே மிகச்சிறந்த மருந்துகள். அனைத்து இருதய நோயாளிகளுக்கும் கொடுக்கப் பட வேண்டிய மருந்துகள். ஆனால் இந்த நான்கையும் ஒரே நேரத்தில் ஒருவருக்கு அளிக்க இயலாது.

காரணம் அவற்றை நோயாளியின் உடல் ஏற்றுக் கொள்ளுமா? பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்குமா? போன்றவற்றை முதலில் அறிய வேண்டும்.

இவற்றை அறிந்தப் பிறகே படிப்படியாக இம்மருந்துகளை நோயாளிக்கு ஒன்றன்பின் ஒன்றாக அளிக்க முடியும்.

இம்மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதனைக் குணப்படுத்த ‘மாற்று மருந்து’ ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பது போல நம் நாட்டில் இல்லை என்பதும் படிப்படியாக இம்மருந்துகளை அளிப்பதற்கு வேறொரு முக்கியக் காரணம்! எனவே ஏதேனும் இரண்டு மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

வாழ்க்கை முறை மாற்றமும், இதய ஆரோக்கியமும்

மருந்துகள் மட்டுமின்றி வாழ்க்கை முறை மாற்றங்களும் இதயத்தைப் பாதுகாக்கும். அதில் ஒன்று குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

உலகச் சுகாதார நிறுவனமானது (WHO) ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு 5 கிராமை விடக் குறைவான அளவு உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

ஆனால், இருதய நோயாளிகள் அதைவிடக் குறைந்த அளவு அதாவது 2 முதல் 3 கிராம் உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவம் பரிந்துரைக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டரை (2½) முதல் மூன்று (3) லிட்டர் வரை நீர் அருந்துதல் சிறந்தது. ஒரு லிட்டர் நீரை அருந்தும் போது உடல் எடை ஒரு கிலோ கூடியிருக்கும்.

ஆதலால் 5 லிட்டர் நீரை அருந்தும்போது 5 கிலோ எடையானது உடலில் கூடியிருக்கும். இதனால் கால் வீக்கம் ஏற்படும்! இதனை மிக எளிய முறையில் எடைக் கண்டறியும் கருவியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்!

தொடர்ச்சியான நடைப் பயிற்சியானது மிக, மிக முக்கியம். நடைப்பயிற்சியின் மூலம் இருதயச் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்!

READ ALSO: மூச்சு விடும்போது விசில் சத்தம் வர காரணம்

இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைக் குணப்படுத்த மருத்துவச் சிகிச்சை முறைகள் அதிகம் உள்ளன. இருப்பினும் ஆரம்ப நிலையிலேயே அவை கண்டறியப்படும்போது விபரீத விளைவுகள் ஏற்படாமலும், பாதிப்புகள் அதிகமாகாமலும் தவிர்க்க முடியும், தடுக்க முடியும், குணப்படுத்தவும் முடியும்!

நாம் உயிர் வாழத் தேவையான தூண்களில் முக்கியமானது இதயம். அந்த இதயம் பழுதடையும் போது அதைத் தாங்கும் தூணாய் மருத்துவம் இருக்கிறது!

என்னதான் பழுதடையும் போது தாங்கத் தூணாய் மருத்துவம் இருந்தாலும், பழுதுப் பழுதுத் தானே! அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் உபாதைகள் தானே!!

உபாதைகளைத் தவிர்க்க, உயிர் வாழத் தூணாய் இருக்கும் இதயத்தை நோயிலிருந்து பாதுகாக்க, ஆரோக்கியத்தைப் பராமரிப்போம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read