நாம் அனைவரும் தினமும் சாப்பிடுகிறோம். ஆனால், அதனை முறையாக சாப்பிடுகிறோம? நாம் சாப்பிடும் அனைத்தும் நமக்கு ஆற்றலாக மாற்றும் விதத்தில் சாப்பிடுகிறோமா? என்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கும். இந்த கட்டுரையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று சில வழிகளை காணலாம்.
- பசித்த பின்புதான் சாப்பிட வேண்டும்.
- வயிற்றில் ஏதாவது சங்கடத்தை உணர்ந்தால், அந்த நேரத்தில் உணவைத் தவிர்க்கவும்.
- சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தும் தான் தண்ணீர் குடிக்கவேண்டும்.
- சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, பத்திரிக்கை படிப்பது ஆகியவற்றையும் தவிர்க்கவும்.
- உணவை மெதுவாக, நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.

- காலையில் சற்று அதிகமான சிற்றுண்டியும், மதியம் மிதமான உணவும், இரவில் குறைந்த அளவு உணவும் உண்பது மிகவும் நல்லது.
- இரவில் சாப்பிட்ட உடனே படுக்கைக்கு ச் செல்லக் கூடாது. இ து அஜீரணம், மாரடைப்பு ம ற் று ம் அசிடிட்டியை அதிகரி க்கச் செய்யும்.
- வாரத்திற்கு ஒருமுறை உணவைத் தவிர்த்து உண்ணாவிரதம் இருத்தல் நல்லது.
- உணவு உண்ட உடனேயே பழங்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். காலை, மதியம், இரவு போன்ற முக்கிய உணவு உண்ணும் நேரங்களுக்கு இடையில்தான் பழங்களை உண்ண வேண்டும்.
- காலை 7 மணி, 11 மணி, மாலை 4 மணி என பழங்களை உண்டால் பழத்தின் முழுப்பலனையும் பெறலாம்.

- மது மிகச் சிறிதளவு என வாரத்திற்கு ஓரிரு முறை அருந்துவதில் தவறில்லை. எனினும் உங்கள் உடல்நலனைப்பொறுத்தும், குடும்ப டாக்டரை கலந்து ஆலோசித்தும் இதைப் பற்றி முடிவு எடுப்பது நல்லது
- அசைவ உணவை அறவேதவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் உடலில் இருக்கும் நோய்களைப் பொறுத்து குடும்ப டாக்டர் இதுபற்றி தகுந்த ஆலோச னை கொடுப்பார்.
இப்படி சாப்பிடுவதால் நாம் உண்ணும் அனைத்தும் நமக்கு ஆற்றலாக மாறும். நாமும் ஆரோக்கியத்துடன் வாழலாம்.