Homeஉடல் நலம்இதயநோய் வராமல் தடுக்கும் 5 வழிகள்!

இதயநோய் வராமல் தடுக்கும் 5 வழிகள்!

இதயம் தான் நாம் உயிர் வாழத் தேவையான அடிப்படை உறுப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இந்த அடிப்படை உறுப்பானது எந்தெந்த வகைகளில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோமா?

அதனை அறிந்து கொள்ள நமக்கு வழிகாட்டுகிறார் இதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

இதய நோய்க்கான காரணங்கள்

இதய நோய்க்குக் காரணமான இரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன், கொழுப்பு போன்ற ஆபத்தானக் காரணிகளைக் குறைத்துக் கொண்டு ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, போதுமான அளவு உறக்கம், மது மற்றும் புகைத்தலைத் தவிர்த்து, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறைப் போன்றவற்றைப் பின்பற்றினாலேயே 80% முதல் 90% வரை இதய நோயிலிருந்து நமது இதயத்தைக் காத்துக் கொள்ளலாம்.

நோயின் தாக்கம் சீராக இருக்கும் பட்சத்தில் மேற்கூறியவற்றைப் பின்பற்றினாலேயே எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் நமது வாழ்நாளை நீடித்துக் கொள்ளலாம்! மாரடைப்பு என்பது விபரீதமான நோயாக இருந்தாலும் அதுதான் விரைவாகக் கணிக்கக்கூடிய, தடுக்கக்கூடிய, அணுகக்கூடிய நோய் ஆகும்!

உடல் ஆரோக்கியமும், இதயத் துடிப்பும்

இதயத் துடிப்பை வைத்து ஒருவர் உடலின் ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது. பொதுவாக இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எழுபது முதல் எழுபத்தி இரண்டு. ஆனால் தப்போது இந்தியர்களின் சராசரி இதயத்துடிப்பு எண்பது வரை இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது சற்றுப் பின்னடைவான எதிர்மறைத் தகவலே!

காரணம் நல்ல திடகாத்தமான, ஆரோக்கியமான உடல் நிலையைப் பெற்றவரின் இதயத்துடிப்பு அறுபது முதல் எழுபது ஆகும். இன்னும் கூடுதல் ஆரோக்கியமான உடல் நிலையைப் பெற்றவரின் இதயத் துடிப்பு இதை விடக் குறைவாகவே (50-55) இருக்கும்!

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கிறது. ஆயினும் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதிர்ந்த வயதினர் என்று அவரவர்களுக்கு அளிக்கப்படும் மருந்தானது மாறுபட்டே உள்ளது. இரத்த அழுத்த அட்டவணையின் படிக் கீழ்க்கண்டவாறு இரத்த அழுத்தமானது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

*<120/<80 – இயல்பான இரத்த அழுத்தம்;

*120-129/<80 – உயர்த்தப்பட்ட இரத்த அழுத்தம்;

*130-139/ 80-89 – 1 ஆம் நிலை உயர்ப் பதற்றம்;

*140+ / 90+‌ – 2 ஆம் நிலை உயர்ப் பதற்றம்;

*180+ /120+ – உயர் அழுத்த நெருக்கடி

சர்க்கரை

சர்க்கரை நோய்க்கென்றும் தனியாக மருத்துவ முறைகள் உள்ளன. சர்க்கரை நோயின் ஐந்து நிலைகளை அதற்கான தகுந்த மருந்துகள் மூலமும் அடிப்படை வாழ்க்கை முறை, நடைபயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தூக்கம் போன்றவற்றின் மூலமும் குறைக்கலாம்.

READ ALSO: அச்சுறுத்தும் ‘காசநோய்’; தடுப்பது எப்படி?

இரத்த குளுக்கோஸ் அட்டவணையின்படிச் சர்க்கரையின் அளவு

ஆகாரத்திற்கு முன் 80-100- இயல்பானது.

101-125 – குறைபாடுள்ள குளுக்கோஸ்.

126-> – நீரிழிவு நோயாளி.

ஆகாரத்திற்குப் பிறகு 170-200 – இயல்பானது.

190-230 – குறைபாடுள்ள குளுக்கோஸ்.

220-300> – நீரிழிவு நோயாளி.

ஆகாரத்திற்குப் பிறகு 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குப் பிறகு

120-140 – இயல்பானது.

140-160 – குறைபாடுள்ள குளுக்கோஸ்.

200-> – நீரிழிவு நோயாளி என்று கணிக்கப்படுகிறது.

கொழுப்பு

கொழுப்பில் ஐந்து வகைகள் உள்ளன. அவை முறையே எல்.டி.எல் (LDL), வி.எல்.டி.எல் (VLDL), ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides), எச்.டி.எல் (HDL), எச்.டி.எல் அல்லாதது (NON- HDL). இதில் எல்.டி.எல் (LDL)லே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இயல்பான நபருக்கு இது நூற்றுக்குக் கீழே இருக்க வேண்டும்.

சர்க்கரை அல்லது இரத்த அழுத்தம் போன்ற ஆபத்துக் காரணிகள் உள்ளவர்களுக்கு எழுபதிற்குக் கீழ் இருக்க வேண்டும். இதய நோயாளிகளுக்கு ஐம்பத்திற்குக் கீழே இருக்க வேண்டும்.

இந்த அளவுகள் இல்லாதப் போது இதனை அடைய வாழ்க்கை முறையுடன் மருந்துகளின் உதவியும் கட்டாயம் தேவை. இவற்றைப் பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்!

உடல் பருமன்

ஒரு மனிதனின் உடல் எடையானது அவனது உயரத்தில் இருந்து நூற்றைக் கழிக்க மீதம் இருக்கும் எடையே சரியா எடை. உதாரணமாக நூற்றி அறுபது சென்டிமீட்டர் இருக்கும் ஒரு நபரின் எடையானது அறுபது கிலோ மட்டுமே இருக்க வேண்டும்.

தலை முதல் கால் வரை உடலின் எந்தப் பகுதியிலும் இரத்த அடைப்பு அல்லது பக்கம் வாதம் நிகழாமல் இருக்க இரத்த உறைவைத் தடுக்கக் கூடிய மருந்து முக்கியப் பங்கை ஆற்றுகிறது.

உதாரணமாக இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது இரத்தக்குழாயின் உட்புறத்தில் பிளவு ஏற்பட்டு இரத்த அடைப்பு நிகழும்.  இதனைத் தவிர்க்க ‘ஆஸ்பிரின்’ என்ற மருந்து முதல் நிலை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது;

READ ALSO: இதயநோயை கண்டுபிடிக்க என்னென்ன பரிசோதனைகள்?

சில நோயாளிகளுக்கு ‘க்ளோபிடோக்ரல்’ மற்றும் ‘ஆஸ்பிரின்’ மருந்துகளின் கலவை மருந்தும் தேவைப்படுகிறது; தீவிரமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ‘டிகாக்ரெலர்’ மருந்தும் பரிந்துரைக்கப்படுகிறது.

அனைத்து நோய்களுக்கும் காரணம் ஆபத்துக் காரணிகள் என்று நாம் கண்டறிந்துள்ளவையே! அவை அனைத்தும் நாம் உண்ணும் உணவுகள், வாழும் வாழ்க்கை முறைகள், பின்பற்றும் தீயப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றாலேயே நமக்குச் சொந்தமானதாக மாறியுள்ளன.

எனவே, நம் பாதையில் உள்ள முற்களை முதலில் நீக்குவோம். முற்கள் பாதத்தைத் தைக்காமல் பாதுகாப்பாய், ஆரோக்கியமாய் வாழ்க்கைப் பாதையில் பயணிப்போம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read