Homeஉடல் நலம்வருடத்திற்கு 10 லட்சம் இந்தியர்களை கொல்லும் ஆபத்தான நோய் பற்றித் தெரியுமா?

வருடத்திற்கு 10 லட்சம் இந்தியர்களை கொல்லும் ஆபத்தான நோய் பற்றித் தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கின்ற நோயைப் பற்றித் தெரியுமா? அந்த நோய்தான் இந்தியர்கள் அதிகமாக இறப்பதற்குக் காரணமான இரண்டாவது பெரிய ஆட்கொல்லி நோய் என்றால் நம்புவீர்களா?

ஆம்… COPD என்கிற நோய்தான் அது!

COPD என்றால் என்ன?

COPD என்பது சுவாசப் பாதையில் காணப்படுகின்ற ஒரு முக்கியமான நுரையீரல் நோய் (Chronic Obstructive Pulmonary Disease). அதாவது நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னை.

COPD பிரச்னையின் அறிகுறிகள் என்ன?

* வறட்டு இருமல் | சளி இருமல்

* மூச்சுத் திணறல்

* மூச்சு விடுவதில் சிரமம்

* COPD பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

* இரவு தூக்கம் சரியாக வராது.

* புரோட்டீன் உள்பட சில சத்துக்கள் வீணாவதால் உடல் மெலிவு ஏற்படும். 

இவையே முக்கியமான COPD பிர்ச்சினையின் முக்கிய அறிகுறிகள்.

COPD எந்த வயதில் வரும்? எந்த வயதினருக்கு ரிஸ்க் அதிகம்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை COPD பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கே பரவலாகக் காணப்பட்டது.  இன்றைய காலகட்டத்தில் பல விதமான காரணங்களால் வயது வரம்பில் மாற்றங்கள் தோன்றியிருக்கின்றன. இப்போது இந்த நாள்பட்ட நுரையீரல் நோய் 35-40 வயதில் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய நோயாக மாறியிருக்கிறது.

COPD பிரச்னையோடு எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்?

100 பேரில் 10 பேருக்கு COPD நாள்பட்ட நுரையீரல் மூச்சுக்குழல் சுருக்க நோய்க்குக் காரணமான அழற்சி நோய் இருப்பதாக ஒரு மருத்துவக் கணக்கெடுப்பு கூறுகிறது.

COPD, ஆஸ்துமா: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

COPD பிரச்னைக்கு புகை மற்றும் காற்று மாசுபாடுதான் முக்கியமான காரணம். சிறு வயது முதலே காணப்படுவது ஆஸ்துமா. அதாவது ஆஸ்துமா அலர்ஜி, பரம்பரை காரணமாக வரக்கூடிய குடும்ப நோய். COPD நோயானது சிறுவயது முதலே இல்லாமல், இடைப்பட்ட காலமான 30-40 வயதில்தான் பாதிக்க ஆரம்பிக்கும். COPD வருவதற்கு  முக்கிய காரணம் சுற்றுப்புறச் சுகாதார சீர்கேடு மற்றும் காற்று மாசுபாடுதான். ஆஸ்துமா என்பது கட்டுப்படுத்தக்கூடிய, சிகிச்சை அளிக்கக்கூடிய, சமாளிக்கக்கூடிய நோயாகும்.  COPD முழுமையாக கட்டுப்படுத்த முடியாத, ஓரளவுக்கே கட்டுப்படுத்தக்கூடிய – ஆனால், சமாளிக்கக்கூடிய நோயாகும்.

இதையும் படிக்கலாமே! தூக்கம், குறட்டை… நடுவே மூச்சுத் திணறலா? | தேவை அதிக கவனம்!

COPD மெதுவாக முன்னேறும். ஆஸ்துமாவுக்கு அதை முழுவதுமாகக் கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சை முறை உள்ளது. COPD, ஆஸ்துமா – இவை இரண்டுக்குமே உள்ளிழுக்கும் மருந்துகள்தாம் மிக முக்கியமான மருந்துகள். ஆஸ்துமாவுக்குச் சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டால், அவை COPD ஆக மாறுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் COPD-ல் ஆஸ்துமா டை, ஸ்மோக்கிங் டைப், இன்ஃபெக்ஷன் டைப் என பல வகைகள் உண்டு.

இவையே COPD, ஆஸ்துமாவுக்கு இடையேயான முக்கியமான வேறுபாடுகள்.

COPD நோயைக் குணப்படுத்த முடியுமா?

COPD என்பது குணப்படுத்த கூடிய நோய் அல்ல. அதில் சில வெளிப்புறப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம்.  COPD நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதனால் நோயின் காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்பவே சிகிச்சை அளிக்க வேண்டும். COPD ஒரு நீண்ட கால நோய். கட்டுப்படுத்தக் கூடிய நோய். ஆனால், குணப்படுத்தக் கூடிய நோய் அல்ல.

இந்த கட்டுரையில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பற்றிய அறிமுகத்தை தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டுரையில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) சிக்கல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read