Homeஉடல் நலம்முதியோரைத் தாக்கும் கோடைக்கால நோய்கள்

முதியோரைத் தாக்கும் கோடைக்கால நோய்கள்

‘கோடைக்காலம்’ என்றால் மாணவர்களுக்கும், இளையோருக்கும் குதூகலமும், கொண்டாட்டமும் தான்!

ஆனால், முதியவர்களுக்கோ சற்றுச் சங்கடம் தான்!! காரணமாய்ப் பலவற்றைக் கூறலாம். அதில் முதன்மையானது அதீத வெப்பமும், அதனால் ஏற்படும் நோய்களும் தான்!

சங்கடத்திற்குக் காரணம் தெரிந்தப்பின் தீர்வுக் காண்பது தானே முறையான செயல். அதற்கு உதவுகிறார் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் திரு.எஸ்.ஜெயராமன் அவர்கள். வாருங்கள் தீர்வைக் காண்போம்.

கோடைக்கால நுரையீரல் நோய்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

கோடையில் வைரஸ் நுண்ணுயிரியால் அம்மை நோய் (Chicken Pox), அக்கி (Herpes) போன்ற கோடைக்கால நோய்களுடன் ஆஸ்துமாவும் (Asthma) ஏற்படும்!

இந்தக் கோடைக்கால ஆஸ்துமாவுக்கென்று தனித்துவமான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறன. மேலும் அம்மை நோய்க்கான வைரஸ் நுண்ணுயிரி நுரையீரலையும் தாக்குகிறது.

இதன் காரணமாக வைரஸ் நிமோனியா (Virus Pneumonia), சின்னம்மை நிமோனியா (Chicken Pox Pneumonia) அக்கி நிமோனியா (Herpes Pneumonia) போன்ற நோய்கள் நுரையீரலில் ஏற்படுகிறன.

READ ALSO: இதயநோய் வராமல் தடுக்கும் 5 வழிகள்!

இவை வயதானவர்களைத் தாக்கும் போது அதன் பாதிப்புகளான வலி, நோய்ப் பரவல் போன்றவை அதிகமாக உள்ளன. நோய்த் தாக்கம் அதிகமாக இருக்கும் போது உயிரிழப்புக் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது!

இத்தகைய விளைவுகளைத் தடுக்க ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட அனைவரும் இதற்கான தடுப்பூசியை (Shingles – சிங்கிள்ஸ்) வருடத்திற்கு ஒரு முறையாவது செலுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் நிலையை அறிந்து, அதற்கான தடுப்பூசிகளை முறையான காலத்தில் செலுத்திக்கொண்டு, முதுமையிலும் கோடையைக் குதூகலமாகக் கொண்டாடலாம்! தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளுங்கள்; கோடையை நோயின்றிக் கொண்டாடுங்கள்!!

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read