மனித வாழ்விற்கு அடிப்படை உணவு, உடை, உறைவிடம் என்று வகைப்படுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்று நம்மின் வகைப்பாடு அவரவரின் தேவைக்கு ஏற்ப நீண்டப் பட்டியலாக உள்ளது.
என்னதான் மனிதனுக்கு மனிதன் பட்டியல் வேறுபட்டு இருந்தாலும் கட்டாயம் ‘தூக்கம்’ என்ற ஒன்று பொதுவான தேவையாக அதில் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றால், அதை நாம் அனைவரும் ஏற்போம் என்பதிலும் ஐயமில்லை!
இத்தகைய தூக்கம் ஒரு மனிதனுக்கு ஏன் கிடைக்காமல் போகிறது? நிம்மதியான தூக்கத்திற்கு என்ன செய்யலாம்? இது குறித்து மருத்துவர் எஸ்.ஜெயராமன் அவர்கள் கூறும் ஆலோசனையை அறிந்துக்கொள்வோம். வாருங்கள்.
READ ALSO: ஜனவரி மாதம் ஜாக்கிரதையாக இருங்கள்
ஏன் தூக்கமின்மை? (Insomnia)
தூக்கத்தில் சுவாச அடைப்பு நோய் (OBSTRUCTIVE SLEEP APNEA), உடல் உபாதைகளான சுவாசப் பிரச்சினைகள் (ஆஸ்துமா), இருதயநோய்கள், உடல் வலிகள், மூட்டு வலிகள் போன்ற பல காரணங்களால் தூக்கமின்மை (Insomnia) ஏற்படுகிறது.
தூக்கமின்மையில் முதன்மை நிலை, இரண்டாம் நிலை என்று நிலைகள் உள்ளன. அதனைக் கண்டறியத் தகுந்த பரிசோதனைகளும் உள்ளன.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்
நூற்றில் எட்டு முதல் பன்னிரெண்டுப் பேரை தூக்கமின்மை நோய்ப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறும் பட்சத்தில் இந்நோயால் வளர்ச்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மேலும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல், இதனால் பல்வேறு நோய்த் தொற்றுக்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.
தூக்கமின்மைக்கான தீர்வுகள்
தூக்கமின்மைப் பிரச்சனைக்கு முறையான உடற்பயிற்சி,
சரியான நேரத்தில் உறங்கி – சரியான நேரத்தில் எழும் பழக்கவழக்கம் அஃதாவது தூக்கத்தில் ஒழுக்கம் (sleep discipline),
மாலை நான்கு மணிக்கு மேல் தேநீர், காபி போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்ப்பது,
இரவு உறங்கும் முன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்பது,
உறங்கும் முன் அரை மணி நேரத்திற்கு முன்பாகப் பால் அருந்துவது,
READ ALSO: வயதானவர்களின் ‘முடி உதிர்தல்’ பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
தியானம் செய்வது,
உறங்கும் அறையை மிதமான குளிர்ந்த நிலையில் வைத்துக் கொள்வது,
அறையை இருட்டாக வைத்துக் கொள்வது போன்ற எளிய நடைமுறைகளே தூக்கமின்மைக்குச் சிறந்த தீர்வுகள்!
மேற்கண்ட முறைகளைப் பின்பற்றும் நிலையிலும் தூக்கமின்மைச் சரியாகாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
மனித வாழ்விற்கு அடிப்படையாகப் பல காரணிகள் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படைச் சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, தூக்கமே!
எனவே, சரியான தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சமச்சீர் உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்! நலம் நமதாகட்டும்!! ஆரோக்கியம் நம்மை ஆளட்டும்!