Homeஉடல் நலம்வெயிலின் தாக்கத்தால் தளர்ந்த உடல் வலிமைபெற!

வெயிலின் தாக்கத்தால் தளர்ந்த உடல் வலிமைபெற!

வயதான பெரியவர்களின் மனம் இன்றைய இளைய தலைமுறையை பார்க்கும்போது மனதில் ‘நான் சின்ன வயசில காலையில் 6 மணிக்கு ஏர் உழ போனால் வெயில் தாழும் வரை ஏரை உழுதுவிட்டுதான் இறங்குவேன்.

காலை முதல் இரவு வரை ஆபிசில் ஓடி ஓடி எத்தனை வேலை செய்து இருப்பேன். இன்று என்னால் அரை கிலோமீட்டர் தூரம் கூடநடக்க முடியவில்லை’ என்று புலம்புவது வழக்கம்.

கை கால்களில் லேசான உதறல், தளர்ச்சி. மயக்கம் வந்திடுமோங்கற பயம். இதெல்லாம் பரவாயில்லை.

ஆனால், மனசுல வயசாயிடிச்சிங்கற கவலையோடு சிறிது பயமும் உடல், நரம்பு தளர்ச்சியும்தான் என்னை பாடாகப்படுத்துகிறது.

சற்றே பலம் இருந்தால் மனம் தளராது என்ன செய்ய இப்படி நினைக்கும் உங்களாகவே இந்த பதிவு.

மனம் உறுதியாக இருந்தால் உடல் உறுதியாகும் என்ன செய்யலாம். சாப்பாடோ ஏத்துகலை என்ன செய்ய?

சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் அமுக்கரா சூரண மாத்திரை மூன்று வேளை எடுக்கலாம். இதில் அமுக்கிரா கிழங்கு , சுக்கு, திப்பிலி, மிளகு ஏலம், சிறுநாகப்பூ, கிராம்பு, சர்க்கரை உள்ளது.

இது பசியைத் தூண்டும், தூக்கம் நன்கு வரும், நரம்பு தளர்ச்சியை போக்கும், தசைகளுக்கும் உறுதியை தரும் (muscle Strengthening) கை கால் எரிச்சலை போக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தனி அமுக்கரா மாத்திரை (சர்க்கரை சேர்க்காத) சாப்பிடலாம்.

பூனைக்காலி சூரணம் இரண்டு வேளை சாப்பிட நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம் குறையும்.

Click To Read: முதியோர் நலனில் செவிலியரின் பணி!

தேற்றான் கொட்டை லேகியம் இருவேளை சாப்பிட தசைகள் பலப்படும். தளர்ச்சி நீங்கும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மாதுளை மணப்பாகு, நன்னாரி மணப்பாகு என ஏதாவது ஒரு மணப்பாகு ஒருவேளை நீருடன் கலந்து சாப்பிட உடற்சோர்வு நீங்கும்.

மேலும். உடல் சூடு தணியும். (மருந்துகள் யாவும் தக்க மருத்துவரின் அறிவுரையின்பேரில் எடுக்க வேண்டும்).

வெயில் காலம் வயதானவர்களுக்கு சிறுநீர் எரிச்சல், சிறுநீர் பாதை நோய்கள் வரும். சிறிது வெயிலில் வெளியில் போய் விட்டு வந்தால் மயக்கம் உடற்சோர்வு ஏற்படும்.

அப்படி இருந்தால் வாழை தண்டு சிறிதளவு வெட்டி நீர் விட்டு வேகவைத்து அந்த தண்ணீரில் சிறிது உப்பு சரக தூள் சேர்த்து குடிக்க நீர்கடுப்பு குறையும்.

உடற்சோர்வுக்கு கொத்தமல்லி இலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை சிறிது சேர்த்து உடன் பனைவெல்லம் தட்டி கலந்து குடிக்க மயக்கம் நீங்குவதுடன் பித்தம் போகும். உடலுக்கு உடனடி எனர்ஜி கிடைக்கும்

கொத்தமல்லியில் விட்டமின் இ, தாதுஉப்புகள் உள்ளது. எலுமிச்சையில் பொட்டாசியம், மைக்ரோ நியுட்ரியன்கள் அதிகம் உள்ளது.

பனைவெல்லத்தில் இரும்புத்து அதிகம் உண்டு. சர்க்கரை நோயாளிகள் பனைவெல்லத்திற்கு பதில் லேசான உப்பிட்டு குடிக்கலாம்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் அஸ்வகந்தா பலாலா ஷாதி தைலத்தை தலையில் தேய்த்து ஊறவைத்து தலை குளிக்க உடற்சூடு தணியும்.

வெயிலின் தாக்கத்தால் வயதானவர்களுக்கு உஷ்ன தலைவலி ஏற்படும். அப்போது குமரி கூந்தல் தைலைத்தை தலைக்கு தினமும் தேய்க்க உஷ்னதலைவலி குறையும்.

Click To Watch: முதுமையில் சருமம் பாதிக்காமல் இருக்க 

வெயில் காரணமாக ரத்தபேதி உஷ்னபேதி முதியோர்க்கு ஏற்பட்டால் இளம் கொய்யா இலையை கொதிக்கவைத்து குடிக்கலாம்.

சில சமயம் வெளி சூட்டினால் மல கட்டு ஏற்பட்டால் கடுக்காய் தூளை இரவில் ஒரு தேக்கரண்டி வெந்வெந்நீரில் எடுக்க மலசிக்கல் தீரும்.

நீர் காய்கள் வெள்ளரி, புடலை, பீர்க்கு, சுரை காய்களை எடுத்து கொள்ளலாம். நீர் மோர், இளநீர், பானகம் அருந்தலாம்.

நீரில் சப்ஜா விதையை ஊறவைத்து தினமும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ஆரஞ்சு சாற்றில் கலந்து குடிக்க உடல் உள் உறுப்பு சூடு தணியும்.

பாதம் பிசின் இரவில் ஊர விட்டு காலையில் பாலில் போட்டு குடிக்க உடற் உள் உறுப்புகளில் ஏற்படும் சூடு தணியும்.

‘இது எதுவும் என்னால் செய்ய முடியாது. எனக்கு ஆட, BP, Sugar, இதயக் கோளாறு இருக்கு…

கிட்னி தொந்தரவுக்கு அளந்துதான் தண்ணீரே குடிக்கனும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. நீங்க சொல்றபடி எதுவும் செய்ய முடியாது.

மாத்திரை மருந்துகள் வேணாம்னு சொல்ற உங்களுக்கு எளிய டிப்ஸ் இதோ… விளக்கெண்ணெய் எடுத்து இரவில் தொப்புளை சுற்றி தடவிவிட்டு காலையில் குளிச்சுடுங்க… உடற்சூடு உங்களை விட்டு போயே போச்சு!

கட்டுரையாளர்

Dr. S. அருள் சொரூபி M.D.(S).,M.A..(yoga)

சித்த மருத்துவர், மேல்மருவத்தூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read