Homeஉடல் நலம்இதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வெச்சிக்க '5D'

இதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வெச்சிக்க ‘5D’

‘நலமா?’ என்ற கேள்வி இயல்பாகத் தெரியலாம்! ஆனால், ‘நலம்’ என்று பதில் கூற இயதால நிலையில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் அந்தக் கேள்வியின் மகத்துவம்!

இனி யார் எப்பொழுது வினவினாலும் ‘நலம் தான்’ என்று கூறும் அளவிற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காக ‘இதய நலன்’ குறித்து அறிந்துகொள்வோம்.

அதற்கு வழிகாட்டுகிறார் இதய நோய் நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் முதன்மை மருத்துவருமான திரு. சு. தில்லை வள்ளல் அவர்கள்.

இதய ஆரோக்கியத்திற்கான ஐந்து ‘D’ கள்

நம் இதயம் ஆரோக்கியமா இயங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து குறிப்புகளை (5D’s) நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும். அவை முறையே,

  1. ஆரோக்கியமான உணவு (Healthy Diet)
  2. உடற்பயிற்சி Drill (or) Exercise
  3. மன அழுத்தமின்மை மற்றும் ஆழ்ந்த உறக்கம் (Distress & Deep Sleep)
  4. மருந்துகள் (Drugs/Medicine)
  5. மருத்துவரின் ஆலோசனைகள் (Doctor’s Advices)

1. ஆரோக்கியமான உணவு (Healthy Diet)

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் போது உணவின் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கின்றன. இதன் மூலம் இதயம் இயங்கத் தேவையான தாதுக்கள் முதல் வைட்டமின்கள் வரை கிடைத்து இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

2. உடற்பயிற்சி (Drill/Exercise)

உடற்பயிற்சியில் நமக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. உடல் பருமன் குறைகிறது. சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, கொழுப்புப் போன்றவற்றின் அளவுகள் சமநிலையில் இருக்கின்றன. இதனால் இதயத்தைத் தாக்கக்கூடிய நோய்கள் தவிர்க்கப்படுகிறன; இதன் மூலமும் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

READ ALSO: நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

3. மன அழுத்தமின்மை மற்றும் ஆழ்ந்த உறக்கம் (Distress & Deep Sleep)

மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கையை இன்றைய சூழலில் நாம் வாழ்தல் என்பது இயலாத ஒன்றுதான். ஆனால், நல்ல உறக்கத்தின் மூலம் இந்த மன அழுத்தம் இல்லாத, பதற்றமில்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ இயலும்!

ஆம், நல்ல உறக்கத்தின் போது உடல் மட்டுமல்லாது உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணமாக உள்ள மூளையும் நன்கு ஓய்வெடுக்கிறது. இதனால் பதற்றம் இன்றி, மன அழுத்தம் இன்றிச் செயல்படத் தேவையான அனைத்து ஆற்றல்களும் உற்பத்திச் செய்யப்படுகின்றன.

உதாரணம், உடல் ஓய்வுக்குப் பின் நாம் ஈடுபடக்கூடிய உடல் சார்ந்த வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறோம் அல்லவா? அவ்வாறானதே இதுவும். எனவே இதன் மூலமும் இதயத்தின் ஆரோக்கியமானது வலுப்பெறுகிறது.

4. மருந்துகள் (Drugs/Medicine)

மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடிய அனைத்து மருந்துகளையும் அவர் பரிந்துரைக்கக் கூடிய அளவில், கால் இடைவேளையில், காலம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரணம், நமது உடலில் அறிகுறிகள் ஏதும் இன்றி அமைதியாகத் தாக்கக்கூடிய நோய்கள் பல உள்ளன! உதாரணமாக, இரத்த அழுத்தம் – 70% (Blood Pressure), சர்க்கரை – 80% (Sugar), கொழுப்பு – 90% (Cholesterol), மாரடைப்பு – 30% (Heart Attack) போன்றவை.

5. மருத்துவரின் ஆலோசனைகள் (Doctor’s Advices)

மருத்துவர்கள் மருந்தை மட்டும் அளிப்பது அல்ல; பல ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தும் முறைகள் என்று அவர்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு ஆலோசனையும் மிக முக்கியமானதே!

உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் மருத்துவரிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டு அதையும் பின்பற்றுங்கள்.

‘ஆரோக்கியம்’ என்ற வார்த்தையின் பொருளை இனிவரும் தலைமுறையினர் அகராதிகளில் தேடுவார்களோ? என்ற ஐயப்பாடுத் தற்போதைய மூத்த தலைமுறை மக்களிடம் நிலவுகிறது.

READ ALSO: சிகரெட் பழக்கத்தை உடனடியாக நிறுத்தும் வழி!

ஏனெனில் ஆரோக்கியமான உணவுகளையும், வாழ்க்கை முறையையும் பின்பற்றிய அவர்களே தற்போது பலவிதமான நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள்!

ஆனால், அவர்களை விட ஆரோக்கியம் குறைந்த உணவுகளையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றக்கூடிய இளம் தலைமுறையினர் எத்தகைய நோய்களுக்கு ஆளாவார்களோ?!? என்ற அவர்களின் நியாயமான அச்சமே இதற்குக் காரணம்.

ஆனால், இனியும் காலம் கடந்து விடவில்லை! இருப்பதைக் கொண்டு உயர்வாய் வாழ்பவன் தான் மனிதன்!! இப்பொழுதும் நம்மிடம் நோயின்றி வாழக்கூடிய அறிவும், வளங்களும் உள்ளன; அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் அச்சத்தைப் போக்குவோம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read