Homeஉடல் நலம்நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு சிகிச்சைகள் இருக்கா?

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு சிகிச்சைகள் இருக்கா?

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், சளி இருக்கும். இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் நுரையீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம்கூட உண்டு என்று நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜெயராமன் கூறுகிறார்.

என்னென்ன காரணங்களால் COPD உண்டாகிறது?

காற்று மாசு

மாசுக் காற்றை சுவாசிப்பதால் COPD பிரச்னை ஏற்படுமானால், சுற்றுச்சூழலில் மாசு காற்றைச் சுவாசிப்பதை தவிர்க்க அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் COPD பிரச்னை ஏற்படுமானால் புகையிலைப் பொருள் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நோய்த்தொற்று

நோய்த்தொற்று காரணமாக COPD பிரச்னை வருமாயின் நோய்த்தொற்று அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே! அடிக்கடி மூச்சு திணறுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

COPD-க்கு என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன?

மிக முக்கியமான சிகிச்சையாக Inhale Medicine – அதாவது உள்ளிழுப்பு மருந்துகள். மேலும் Bronchodilators என்று சொல்லக்கூடிய விழி வழியாக உள்ளிழுக்கக்கூடிய மருந்துகள். இவையே COPD-க்கு மிக முக்கியமான மருந்துகள். Inhale Medicine பல வகைகளில் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதோடு, நோய்த்தொற்று வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் Flu Vaccine, Pneumonia Vaccine எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த Inhale Medicine உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் புகை வடிவில் Nebulization எடுத்துக்கொள்ளலாம். ஒருசிலருக்கு ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும்பட்சத்தில் ஆக்ஸிஜன் அளிக்க நேரிடும்.

சிலருக்கு நுரையீரல் மிகவும் மோசமாகச் செயலிழந்துவிடும். அவர்களுக்குச் செயற்கை சுவாசம், புகை மருந்து மற்றும் Non-invasive Ventilation (NIV) என்ற கருவியைப் பொருத்த வேண்டும். இவையெல்லாம் COPD நோய்க்கு மிக முக்கியமான சிகிச்சை முறையாகும்.

COPD பிரச்னை தீவிரமாக இருந்தால் அதற்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படும்?

COPD பிரச்னை தீவிரமாக இருந்தால் அவர்கள் மூச்சுவிட மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு ஆக்ஸிஜன், Nebulization என்கிற புகை மருந்து, ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்க வேண்டும். இதுபோக அவர்களுக்கு Non-invasive Ventilation (NIV) என்கிற செயற்கைச் சுவாசத்தை கொடுக்க வேண்டும்.

இதையெல்லாம் கொடுத்தும் அவர்களுக்கு குணமடையவில்லை என்றால், Bronchoscopy Lung Volume Reduction என்கிற ஒரு intervention treatment செய்ய வேண்டும். அந்தச் சிகிச்சையிலும் அவர்களுக்குப் பலன் கிடைக்காத பட்சத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.  

இதையும் படிக்கலாமே! வருடத்திற்கு 10 லட்சம் இந்தியர்களை கொல்லும் ஆபத்தான நோய் பற்றித் தெரியுமா?

COPD சிகிச்சை காலம் எவ்வளவு?

COPD (Chronic Obstructive Pulmonary Disease) நாள்பட்ட மூச்சுக்குழல் அழற்சிக்கு இதற்கு அதிக நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரிடும். அதாவது இந்த நோய்க்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும். நோய்த்தொற்று வராமல் காக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தொடர்ந்து Inhale Medicine எடுத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read