ஆஸ்துமா நோயானது முற்றிலுமாகக் கட்டுப்படுத்தக்கூடிய நோயாகும். நுரையீரலின் மூச்சுக்குழல் சுருங்கும் தன்மை அதிகமானால், சிலருக்கு மூச்சுத்திண்றல் அதிகமாகும்.
இரவில் தூக்கமின்மை ஏற்படும். பகல் நேரங்களில் சோர்வுடன் அசதியாக இருப்பார்கள். இதனால் வேறு சில பிரச்னைகளும் ஏற்படும். அதனால் ஆஸ்துமா அதிகமாகாமல் இருப்பதற்கு தூண்டுதல் காரணிகள் (Triggering Factors), தூசு, புகை போன்ற ஒவ்வாமை பொருள்கள்(Allergens), காற்று மாசுவை தவிர்க்க வேண்டும்.

புகைப் பழக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஃப்ளு தடுப்பூசிகளை ஆண்டுதோறும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிமோனியா தடுப்பூசி வாழ்கையில் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் தடுப்பு முறைகளை நாம் சரியாக மேற்கொண்டால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலையே ஆஸ்துமா இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் சரிவிகிதத்தில் இருக்கும். மேலும், ஆஸ்துமாவிற்கு தொடர் சிகிச்சை மிக மிக அவசியம்.
ஆஸ்துமா பரம்பரைக்குள் பரவாமல் தடுக்க முடியுமா?
ஆஸ்துமா நோயானது பரம்பரை காரணமாக வரக்கூடிய மூச்சுக்குழல் சுருக்க நோய் அல்லது அழற்சி நோய் என்று சொல்வோம்.
உதாரணமாக வீட்டில் உள்ள தாத்தா பாட்டி, அப்பா அம்மா, குழந்தைகளுக்கு இருந்தால், உடன் இருப்பவர்களுக்கு ஆஸ்துமா வரக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். அது தூண்டுதல் காரணமாக எளிதில் தோன்றிவிடும்.
READ ALSO: எந்தெந்த காரணங்களால் ஆஸ்துமா வரலாம்?
யாருக்கெல்லாம் ஆரம்ப அறிகுறியாக தும்மல் அடிக்கடி வருகிறதோ, அவர்களுக்கு ஆரம்ப நிலையிலையே தும்மலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வாமைப் பொருட்கள் விளைவு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

முனைவற்ற புகைபிடித்தல் (Passive Smoking) – வீட்டில் ஒருவருக்கு புகைப் பழக்கம் இருந்தால் மற்றவருக்கும் அந்த புகை பரவும். அவ்வாறு புகை பரவால் இருக்க சில தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான தடுப்பு முறைகளை மேற்கொண்டாலே, குடும்பத்தில் பரம்பரை நோய் இருக்கும் பட்சத்தில், அவை அதிக அளவில் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்படும் நிலையிலேயே வைத்துக் கொள்ளலாம்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன?
அதிக அளவு வாயு பானங்கள் என்று சொல்ல கூடிய (சோடா. சோடாவில் கார்பன்டை ஆக்ஸைடு கலந்தவை), கெமிக்கல் குளிர்பானங்கள் (அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு கலந்திருக்கும்) – இவற்றையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு கெமிக்கல்ஸ் அடங்கியிருக்கும்.
அந்த உணவு முறைகள் ஒரு சிலருடைய உடல் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் அவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு மாமிச உணவுகள், கடல் உணவுகளான மீன், நண்டு போன்ற உணவுகளில் யாருக்கெல்லாம் அலர்ஜி ஏற்படுகிறதோ, அதை உண்பதைத் தவிர்த்தால் மட்டுமே போதுமானது.

பெரும்பாலும் உணவிற்கும் ஆஸ்துமா தூண்டுதலுக்கும் மிக அதிக அளவு தொடர்பு கிடையாது. ஒருசில உணவுகள் 10%-15% சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதை மட்டும் அவர்கள் தவிர்த்தால் போதுமானது. அதன் மூலம் ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா அதிகமாவதை குறைத்துக் கொள்ளலாம்.
READ ALSO: எல்லோருக்கும் குரல் எவ்வளவு முக்கியம்?
ஆஸ்துமா நோயாளிகளிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
ஆஸ்துமா நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும் பட்சத்தில், அருகில் உள்ளவர்கள், தூண்டுதல் என்று சொல்லப்படுகின்ற புகைப்பிடித்தலை அவசியம் தவிர்க்க வேண்டும்.
அதோடு, தூசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிரக்க வேண்டும். நம் நண்பர்களில் புகை பிடிக்கும்போது, அருகில் நின்று அந்த புகையை நாம் சுவாசிக்க நேரும். அந்த புகையின் காரணமாக நமக்கு இருமல், சளி, ஆஸ்துமா அதிகமாகும்.
ஆகவே ஆஸ்துமா நோயாளிகள் வெளி இடங்களுக்கு செல்லும் போது அருகில் இருப்பவர்களிடம் இருந்து நோய்த் தொற்று வராமலும், வந்தால் அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் பூச்சி மருந்து அடித்தலின் போது ஆஸ்துமா நோயாளிகள் அந்த அறையில் இருந்து வேறு அறைக்குச் செல்ல வேண்டும்.
கட்டுரையாளர்
