நுரையீரல் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. மூச்சு இல்லை என்றால் உயிர் இல்லை! அவ்வாறு மூச்சு பரிமாற்றம் ஏற்படுகின்ற முக்கியமான உறுப்புதான் நுரையீரல்.
ஆரோக்கியமான நுரையீரல் எப்படி இருக்க வேண்டும்?
1. சுவாசிக்கும் போது எளிதாக இருக்க வேண்டும்.
2. மூச்சுவிடுவதில் சிரமம் இருக்க கூடாது.
3. நெஞ்சு வலி, இறுக்கம் இருக்க கூடாது.
4. இரவில் நன்றாகத் தூங்கி காலையில் எழும்போது புத்துணர்ச்சியாக உணர வேண்டும்.
இவையே நுரையீரல் ஆரோக்கியத்தின் முக்கியமான காரணிகள்.
நுரையீரல் நலமாக இல்லை என்பதை அறிவது எப்படி?
1. நுரையீரல் நன்றாக வேலை செய்யவில்லை என்றால், சுவாசிப்பதில் தடை ஏற்படும்.
2. சரியாக மூச்சுவிட முடியாது. அதாவது மூச்சு விடும்போது சிரமப்படுவார்கள். அப்போது உள்ளுறுப்பில் ஏதோ ஒரு சத்தம் – விசில் அடிப்பதுபோல சத்தம் கேட்கும்.
3. சிலருக்கு இருமல், சளி இருக்கும். இருமல் ஏற்பட்டு சளியை துப்பிக்கொண்டே இருப்பார்கள். சளியில் ரத்தம் கூட வரலாம்.
4. நடக்கும்போது இளைப்பாக இருக்கும். படியேற முடியாது.
5. நெஞ்சு இறுக்கம் இருக்கும்.
இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கும்பட்சத்தில் நுரையீரலில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
இதையும் படிக்கலாமே! வருடத்திற்கு 10 லட்சம் இந்தியர்களை கொல்லும் ஆபத்தான நோய் பற்றித் தெரியுமா?
யாருக்கெல்லாம் நுரையீரல் புற்றுநோய் வரும் சந்தர்ப்பம் அதிகம்?
உலகளவில் புற்றுநோய் வரக்கூடிய உறுப்புகளின் பட்டியலில் நுரையீரல் முன்னணியில் உள்ளது. பின்வரும் பட்டியலில் உள்ளோருக்கு நுரையீரல் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் அதிகம்.
1. 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு,
2. புகைப்பிடிப்பவர்களுக்கு மிக அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.
3.மாசு காற்றை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். இவர்கள் ரிஸ்க்கி குரூப் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆம். புகைப் பழக்கம், புகை சார்ந்த மாசுக் காற்று ஆகிய காரணங்களால்தான் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
நுரையீரல் புற்றுநோய் 60% முதல் 70% வரை ஆண்களுக்கே ஏற்படுகிறது. 25% முதல் 35% வரைதான் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆண்கள் சாலைகளில் காற்று மாசுவை அதிக அளவில் சுவாசிப்பதாலும், பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போதும் பல விதமான புற்றுநோய் தாக்கங்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை அதிக அளவு புகை பழக்கம் இருப்பதால், ஆண்களுக்கே அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
நாம் செய்யும் இந்த தவறுதான் நுரையீரல் புற்றுநோய் வர முக்கியமான காரணமா?
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் புகையிலை புகைப்பது. அதோடு, பெட்ரோல், டீசலில் இருந்து வரக்கூடிய புகையான மாசுக் காற்றை நாம் சுவாசிக்கும் பட்சத்திலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். தொழில் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும் Asbestos Chemical, Arsenic போன்ற தொழிலகங்களில் பணிபுரிபவர்களுக்கும், அணுமின் நிலையத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் அதிகமாக இருக்கிறது. அதோடு, Fuel Exposure மூலமாகவும் நுரையீரல் புற்றுநோய் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை யார் யார் செய்ய வேண்டும்?
1. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.
2. புகைப் பழக்கம் உள்ளவர்கள்.
3. தொந்தரவு இல்லாத பட்சத்திலும் நுரையீரல் பரிசோதனை யார் வேண்டுமானாலும் செய்து பார்ப்பது நல்லது.
இந்தகட்டுரையில்நுரையீரல்புற்றுநோய் பற்றியஅறிமுகத்தைதெரிந்துகொண்டோம். அடுத்தகட்டுரையில்நுரையீரல்நோயால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிதெரிந்துகொள்ளலாம்.