நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய் (COPD) போன்ற நோய்களால் பாதிக்காமல் இருக்கவும், நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் நுரையீரலியல் நிபுணர் டாக்டர் ஜெயராமன்.
COPD வராமல் தடுக்க முடியுமா?
COPD என்பது சிகிச்சை அளிக்கக்கூடிய, தடுக்கக்கூடிய, சமாளிக்கக்கூடிய நோய்தான்!
COPD வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1. நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய் வராமல் தடுக்க, மாசு காற்று, புகையிலையை புகைக்காமல் புகைக் காற்றைச் சுவாசிக்காமல் இருக்க வேண்டும்.
2. நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. வெளியில் செல்லும்போது மாசுக் காற்றை சுவாசிக்காமல் இருக்க, முகக்கவசம் அணிந்து கொள்ளலாம்.
4. நோய்த்தொற்று வராமல் தடுக்க ப்ளூ தடுப்பூசி மற்றும் நிமோனியா தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.
5. உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மூலமாக நுரையீரலை வலுவடைய செய்யலாம்.
6. தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுக்கும் பட்சத்தில் நோய் தொற்று உண்டாவதைத் தடுக்கலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே COPD தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே! வருடத்திற்கு 10 லட்சம் இந்தியர்களை கொல்லும் ஆபத்தான நோய் பற்றித் தெரியுமா?
உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் COPD வராமல் தடுக்குமா?
உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு… இவை இரண்டையும் நுரையீரல் புனரமைப்பு (Pulmonary Rehabilitation) என்று சொல்வோம். இதில் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, நுரையீரலை வலுப்படுத்துகின்ற பயிற்சி என அனைத்தும் அடங்கும். COPD நோய் வராமல் தடுக்க புரத உணவு முறைகள் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
இதில் சைவ உணவில் பருப்பு வகைகளும், அசைவ உணவில் மீன், கோழி வகைகளும் அடங்கும். நுரையீரலை வலுவடைய செய்யக்கூடிய மூச்சுப் பயிற்சிகள், பிராணயாமம், Diaphragmatic Muscle, Chest Wall Muscle என பலவிதமான உடற்பயிற்சிகள் இருப்பதால்தான் இந்த வழிமுறையை Pulmonary Rehabilitation என்கிறோம்.
அனைத்து நோயாளிகளும் இதைச் செயல்படுத்தும்போது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் நன்றாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! அடிக்கடி மூச்சு திணறுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம்!
COPD உள்ளவர்கள் எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
COPD நோய் உள்ளவர்கள் டாக்டர் ஆலோசனையின் பேரில் மருத்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக Inhale Medicine அல்லது Nebulization தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஆண்டுதோறும் ப்ளூ தடுப்பூசி, நிமோனியா தடுப்பூசி, பெட்ரசிஸ் எனும் கக்குவான் இருமல் தடுப்பூசி மற்றும் ஹெர்பிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நுரையீரல் வலுவடைய செய்ய வேண்டிய மூச்சுப் பயிற்சிகள், புரத உணவுகள் ஆகியவற்றை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரை தொடர்ச்சியாக அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த முறைகளை நாம் பின்பற்றினால் நுரையீரலை நல்ல முறையில் பாதுகாக்க முடியும். COPD நோயை நாம் கட்டுப்படுத்த முடியும்.
மேற்கூறிய முறைகளை நாம் தவறாமல் கடைபிடித்து வரும் பட்சத்தில் COPD நோயை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்து, வாழ்வை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும்.
இதையும் படிக்கலாமே! நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு சிகிச்சைகள் இருக்கா?