Homeஉடல் நலம்எல்லோருக்கும் குரல் எவ்வளவு முக்கியம்?

எல்லோருக்கும் குரல் எவ்வளவு முக்கியம்?

குரல் என்பது தகவல் தொடர்பு வடிவங்களில் ஒன்றாகும். பொதுவாக குரலுக்கு ஓர் உணர்ச்சி இருக்கிறது. குரல் ஒரு மனிதனுக்கு தனித்த அடையாளத்தைக் கொடுக்கும்.

ஒருவர் வேறோர் அறையிலிருந்து நம்மிடம் பேசுகிறார். அவர் நமக்கு தெரிந்தவர் என்றால், அவரின் முகத்தைப் பார்க்காமலே அவர் யாரென்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். அதனால் குரல் மிகவும் முக்கியமான ஒன்று.

அவை ஒரு மனிதனுக்கு அடையாளத்தை அளிக்கிறது. அதோடு, வெவ்வேறு வகையான குரல் தொனிகள் உங்கள் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

குரல் பாதிக்கப்பட்டால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

குரல் பாதிப்பு ஏற்படும்போது, சிலருக்கு சாதாரண குரலிலிருந்து அசாதாரணமாக மாறும். அதனால் குரல் தடைபடலாம். தொண்டை சிறிது கரகரவென்று இருக்கும். குரலின் மென்மை தன்மை குறைந்து காணப்படும்.

சத்தமாகப் பேசினாலும் குரலின் சுருதி குறைவாக இருக்கும். மேலும் பெண் குரல் சட்டென்று ஆண் குரல் போல் கேட்கும். அல்லது ஆண் குரல் பெண் குரலாக மாறி கேட்கும். இந்த மாதிரியான பிரச்னைகள் குரலில் ஏற்படும்.

தற்காலிகக் குரல் மாற்றம், நிரந்தரக் குரல் மாற்றம் ஆகியவற்றுக்கான அறிகுறிகள் என்ன? தற்காலிகமாகக் குரல் மாற்றம் அடைந்தால், சாதாரண குரலில் இருந்து அசாதாரண குரலில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இது தொடர்ந்து 2-3 வாரங்கள் இருந்தால், தற்காலிக குரல் மாற்றம் என்று கூறலாம். ஏனென்றால், அதன் பின் குரல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்.

READ ALSO: வயதானவர்களின் ‘முடி உதிர்தல்’ பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

அதுவே நிரந்தரமாக குரல் மாற்றம் என்றால், அது இயல்பு நிலைக்கு திரும்பாது நிரந்தரமாக இருக்கும். இது நாம் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

தற்காலிக குரல் மாற்றத்திற்கான காரணங்கள் என்ன? தற்காலிகக் குரல் மாற்றத்தின் காரணம், ஃபோனோட்ராமா என்று சொல்வார்கள். அதாவது குரல் குழாயில் சிறுகட்டி வந்திருக்கும். அந்த கட்டி ஓர் ரத்தக் கட்டி போல் பாலிப் ஆக அல்லது நீர்க்கட்டியாகத் தோன்றலாம்.

அளவுக்கு அதிகமாக கத்துதல், ஓய்வில்லாமலும் தண்ணீர் அருந்தாமலும் அதிக நேரம் பேசிக் கொண்டு இருத்தல் போன்ற காரணங்களாலும் குரல் மாற்றம் ஏற்படலாம்.

சில நாட்கள் ஓய்வு எடுத்தாலே, குரல் இயல்பு நிலைக்கு திரும்பும். அவ்வாறு குரல் இயல்பு நிலைக்கு திரும்பும்போது, அவை தற்காலிக குரல் மாற்றம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டால் கூட குரலில் மாற்றம் ஏற்படும். ஏனென்றால் குரல் வளையில் வீக்கம் ஏற்படும், நீர் சேரும். அதனால் நோய்த் தொற்று இருக்கும் வரையிலும் குரல் தெளிவாக இருக்காது. சாதாரண குரலும் வராது.

தொண்டையில் நோய்த்தொற்று சரியான பிறகு குரல் சாதாரண நிலைக்கு திரும்பினால், இது தற்காலிக குரல் மாற்றம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

தொற்றுகளில் முக்கியமாக 3 வகைகள் இருக்கின்றன. 1.பாக்டீரியா 2.வைரஸ் 3.ஃபங்கஸ் (பூஞ்சை)

பாக்டீரியா

பாக்டீரியல் நோய் தொற்று மிகவும் பொதுவானது. நீர்த்துளி தொற்றாக வரக் கூடியது. அதாவது, மற்றொருவர் இருமி, அதன் மூலம் நமக்கு பரவக் கூடியது. பாக்டீரியா நோய்த் தொற்று 2 வாரங்களில் குணமடையும்.

வைரஸ்

இப்போது, கொரனா நோய்த்தொற்று வந்தது போல, வேறு பல வைரஸ்கள் நோய்த் தொற்றாகப் பரவும்போது குரல் பிரச்னையும் வரலாம். அப்போது குரல் சாதாரண நிலைக்கு திரும்ப 3 வாரங்கள் அல்லது 1 மாத காலம் எடுத்துக் கொள்ளும்.

ஃபங்கஸ் (பூஞ்சை)

ஃபங்கஸ் மிகவும் குறைவாக பரவக் கூடியது. அதாவது தொண்டையில் எச்சில் இல்லையென்றால், ஃபங்கஸ் வரலாம். இதனை சந்தர்ப்பவாதத் தொற்று(opportunistic infection) என்று சொல்வோம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் ஃபங்கஸ் வரலாம். வயதான நோயாளிகள் ஆஸ்துமா மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு இது வரலாம்.

தற்காலிக குரல் மாற்றம், நிரந்தர குரல் மாற்றத்திற்கான சிகிச்சைகள் என்ன?

தற்காலிகக் குரல் மாற்ற தொற்றுகளான லாரங்க்டிடிஸ் (laryngitis), தொண்டை நோய்த்தொற்றுக்கு ஆண்டிபயாடிக் (antibiotic), அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), நீராவி உள்ளிழுத்தல் (steam inhalation), போதுமான நீரேற்றம் (adequate hydration) போன்ற வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் குரலைக் குணப்படுத்திவிடலாம்.

இரண்டு வாரங்களில் நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். நிரந்தரக் குரல் மாற்றத்திற்கு இன்னும் கூடுதல் சிகிச்சைகள் தேவைப்படும். முதலில் மருந்துகளில் குணப்படுத்த முயற்சி செய்வோம். அதற்குப் பழமைவாத சிகிச்சை (conservative treatment) என்று சொல்வோம்.

அந்த சிகிச்சையில் குணமடையவில்லை என்றால், குரல் சிகிச்சை செய்வோம். அப்படி 2 வாரங்களுக்கு குரல் சிகிச்சை கொடுத்து குரலில் முன்னேற்றம் நிகழ்கிறதா என்று சோதிப்போம்.

அந்தச் சிகிச்சையிலும் சரியாகவில்லை என்றால், அறுவை சிகிச்சையை(surgical intervention) மேற்கொள்வோம். அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இயல்பு நிலைக்கு திரும்புவார்.

READ ALSO: முதியோர் பாதுகாப்புச் சட்டம் – சாதகமா? பாதகமா?

யாரெல்லாம் குரல் பரிசோதனை செய்ய வேண்டும்?

பொதுவாக குரல் அசாதாரணமாக உள்ள அனைவருமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக அவர்களின் வாழ்வாதாரமே (தொழில்) குரலைச் சார்ந்து இருக்கும்பட்சத்தில், அதாவது occupation voice users அல்லது professional voice users குரல் பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அதன் மூலம் நோயை சரிசெய்ய வேண்டும். ஏனென்றால், அவர்களின் வழக்கமான பணிகள் குரலை சார்ந்தவை. முக்கியமாக ஆசிரியர்கள், பாடகர்கள், வழக்கறிஞர்கள், சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் (Marketing Professionals) போன்ற தொழில்முறை குரல் பயனர்கள் (professional voice users).

இவர்கள் அதிகம் அளவில் அவர்களின் குரலை பயன்படுத்துகிறார்கள். சில நேரம் குரல் துறையில் உள்ள மக்கள் அவர்களின் குரலை நிறைய பயன்படுத்த நேரிடும்.

2-3 வாரங்கள் கடந்தும் குரல் இயல்பு நிலைக்கு திரும்பவில்லையென்றால், குரல் பரிசோதனை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ENT பரிசோதனை செய்து நோய்க்கான காரணத்தை கண்டறிவது அவசியம்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read