ஆஸ்துமா என்பது பரம்பரை காரணமாக நுரையீரலின் மூச்சுக் குழலில் வரக்கூடிய முக்கியமான சுருக்க நோய். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்று நோய் போல பரவாது. ஆனால், குடும்பத்துக்குள் தாத்தா பாட்டி, அப்பா அம்மா, குழந்தைகளுக்கு என தொடர்ந்து வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம்.
ஆஸ்துமா என்பது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயே. ஆஸ்துமாவுக்கான தூண்டுதல்கள் எவையெவை எனக் கவனித்து, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்தாலே ஆஸ்துமா தாக்குதல் ஏற்படாமல் இருக்கும். அதனால்தான், ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மூச்சுக் குழல் சுருக்க நோய் என்று குறிப்பிடுகிறோம்.
ஆஸ்துமாவில் பல்வேறு நிலைகள் (ஸ்டேஜஸ்) இருக்கின்றனவா?
நோயாளிக்கு ஏற்பட்டுள்ள இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் மற்றும் நுரையீரல் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்துமாவின் நிலைகளை வரையறுக்கலாம்.
1. முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமா
2. மிதமாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமா
3. கட்டுப்படாத ஆஸ்துமா
4. மிக அதிக அளவு ஆஸ்துமா இப்படி நான்கு வகையாக ஆஸ்துமாவை வகைப்படுத்துகிறோம்.
READ ALSO: எல்லோருக்கும் குரல் எவ்வளவு முக்கியம்?
1. லேசான ஆஸ்துமா
அதோடு, நோயாளியின் அறிகுறிகள் மற்றும் செயல்திறனைப் பொருத்தும் இதைப் பிரிக்கலாம். அது…
2. மிதமான ஆஸ்துமா
3. கடுமையான ஆஸ்துமா
ஆஸ்துமாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?
நோயின் தீவிரம் எந்த அளவு இருக்கிறது? முழுவதும் குணப்படுத்தக்கூடிய நிலையில் நோயாளி இருக்கிறாரா? அல்லது நோய் பகுதியளவு குணப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறாரா? அல்லது கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவா? கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமாவா? அல்லது தீவிரமடைந்த ஆஸ்துமாவா?
முதலில் இப்படி வகைப்படுத்த வேண்டும். பெரும்பாலும், அனைத்து ஆஸ்துமா நோயாளிகளுமே சில கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சில நோயாளிகளுக்கு சீராக ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நோயாளிக்கு தேவைப்படும் பட்சத்தில் மட்டும் ஆஸ்துமா நிவாரண மருந்துகள் எடுத்துக் கொண்டால் போதுமானது.
தற்போது நிவாரண மருந்துகளும் கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகளும் ஒரே இன்ஹேலர் வடிவில் கிடைக்கின்றன. அவற்றைத் தேவைப்படும் பட்சத்தில் உபயோகித்தால் போதும்.
ஆஸ்துமா நோயை சரியான முறையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தொடர்ந்து தினமும் காலையில் ஒருமுறை இரவு, ஒருமுறை அல்லது தினந்தோறும் ஒருமுறை மட்டும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தக் கூடிய மருந்து, நிவாரண மருந்து ஆகிய இரண்டையும் கலந்த மருந்தினை எடுத்துக் கொண்டால், ஆஸ்துமா முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
READ ALSO: டிமென்சியா நோயாளிகள் எப்படியெல்லாம் இருப்பார்கள்?
ஆஸ்துமா மோசமான நிலையில் இருந்தால் எந்த மாதிரியான சிரமங்கள் ஏற்படும்?
ஆஸ்துமா முற்றிய நிலையில் இருந்தால்…
1. மூச்சுத் திணறல்
2. தூக்கமின்மை
3. அதிக அளவு இருமல்
4. மூச்சு விடும்போது அதிக அளவு சத்தம்
இதுபோன்ற தொந்தரவுகள் இருந்தால், ஆஸ்துமா மிகவும் தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நிலையிலுள்ள நோயாளிகளுக்கு புகை மருந்துகள்(nebulizer) கொடுக்க வேண்டும்.
மாத்திரை வடிவில் உள்ள ஸ்டீராய்டு மருந்துகள், மூச்சுக்குழலை விரிவடைய செய்யக்கூடிய மருந்துகளையும் சரியான முறையில் கொடுக்க வேண்டும்.
வேறு ஏதேனும் நுரையீரலில் பிரச்னை காரணமாக ஆஸ்துமா கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அது ஏன் தீவிரமான நிலையில் இருக்கிறது? நுரையீரலில் நோய்த் தொற்று இருக்கிறதா? என்று சோதித்து அந்நோயினைக் குணப்படுத்திவிட்டால் ஆஸ்துமா கட்டுப்பாடாக இருக்கும்.