Homeஉடல் நலம்தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டைக்கு தீர்வு!

தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டைக்கு தீர்வு!

பொதுவாக உறக்கத்தின் போது மூச்சு விடுதலில் அதிகமான சத்தம் ஏற்படுவதையே குறட்டை என்கிறோம்.

குறட்டை விடுதலை இரண்டு வகையாக சொல்லலாம். ஒன்று எளிய குறட்டை (Simple Snoring), மற்றொன்று தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Obstructive Sleep Apnea (OSA)).

எளிய குறட்டை (Simple Snoring)

இது தூக்கத்தில் சத்தமாகக் குறட்டை விடுதல். இதனால் குறட்டை விட்டு தூங்குவோருக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. அவருடன் படுத்துக் கொண்டிருப்பவருக்கோ தூங்க முடியாத அளவுக்குத் தொந்தரவாக இருக்கும்.

எளிய குறட்டையில் எப்போதும் சத்தம் மட்டும்தான் இருக்கும். நீண்ட காலமாக சத்தம் போட்டுக் கொண்டே தூங்குவார்கள். ஆனாலும், உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்குக் காலப்போக்கில் Hypertension, Cardiac Problems, Arrhythmia பிரச்னை வருவதற்கான அபாயம் இருக்கிறது. அதனால் பிரச்னையை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நோயாளிக்கு நன்மையாக அமையும்.

READ ALSO: படுத்த உடனே தூக்கம் வர டிப்ஸ்

எளிய குறட்டை (Simple Snoring) உடைய நோயாளி தூங்கும்போது குறட்டை சத்தம் சங்கடமாக இருந்தால், அதனை சரி செய்ய பல வழிகள் இருக்கின்றன.

நோயாளிக்கு சிறு சிறு உபகரணங்கள் அல்லது மருத்துவ சாதனங்கள் கொடுப்போம். அவற்றைப் பயன்படுத்தி நோயாளி தூங்கலாம். ஒரு சில நேரம் எளிய குறட்டைக்கான தீர்வாக அறுவை சிகிச்சையும் கூட அமையலாம்

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

இது தூங்கிக் கொண்டு இருக்கும்போது, நோயாளிக்கு மூச்சு நின்றுவிடும். அதாவது தூக்கத்தின் போது சுவாசத்தின் சிறு சிறு இடைநிறுத்தங்கள் இருக்கும்.

உதாரணமாக 8 மணி நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், 1 மணி நேரத்திற்கு 50-60 முறை கூட மூச்சு விடாமல் இருப்பார்கள். அதாவது, தூங்கிக் கொண்டிருக்கும்போது மூச்சை நிறுத்திவிட்டு திடீரென்று வேகமாகவும் சத்தமாகவும் மூச்சு இழுப்பார்கள்.

தொடர்ந்து குறட்டை சத்தம் கேட்கும்போது, தீரென்று சத்தமில்லாமல் அமைதியாக இருக்கும். மீண்டும் 1-2 வினாடிகள் கழித்து சத்தமாக மூச்சு இழுப்பார்கள்.

சில நேரம் அந்த அதிக சத்தம் காரணமாக நோயாளியே எழுந்துவிடுவார்கள். எழுந்து கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் தூங்கி விடுவார்கள். சில நோயாளிகள் தூங்கி எழுந்தவுடன், அவர்களுக்கு தூங்கிய திருப்தி இருக்காது.

மூச்சு திணறலுக்கான அறிகுறிகள்

நன்றாக 8  மணி நேரம் தூங்கி இருப்பார்கள். காலை எழுந்து பார்த்தால் தூங்கிய உணர்வே இருக்காது. சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரத்திலும் தூக்கம் வரும். சில நேரம் வாகனம் ஓட்டும்போது கூட தூக்கம் வரும். இது மிகவும் ஆபத்தானது. 

பகல் நேரத்தில் தூக்கம் இருக்கும். தூங்கி எழுந்தவுடன் தலைவலி இருக்கலாம். இவைதாம் இந்தப் பிரச்னைக்கான முக்கியமான அறிகுறிகளாகும்.

இதை எப்படி மதிப்பிடுவது ?

பொதுவாக நோயாளி மருத்துவரை அணுகும்போது, அவர்களிடம் குறிப்பிட்ட சில கேள்விகள் கேட்போம்.

நீங்கள் எத்தனை மணிக்கு தூங்க செல்கிறீர்கள்?

எப்படித் தூங்குகிறீர்கள்?

உங்களுடன் தூங்குபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கடையில் இருக்கும் போது தூங்குகிறீர்களா?

வேலையில் இருக்கும் போது தூங்குகிறீர்களா?

டி.வி பார்க்கும்போது தூங்குகிறீர்களா?

மற்றவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தூங்குகிறீர்களா?

நீங்கள் தூங்குவதற்கான என்ன வாய்ப்புகள் இருக்கிறது?

இப்படி பல்வேறு வகை கேள்விகள் உண்டு.

இதற்கு Stop Bang Questionnaire – Epworth Sleepiness Scale(ESS) என்று பெயர். இதுபோன்ற கேள்விகளை நோயாளிகளிடம் கேட்டு, அவரது நிலையை மதிப்பிடுவோம்.

ஒருவேளை நோயாளிக்கு அதில் நல்ல மதிப்பீடு வந்தால் அது நல்லது அன்று. ஏனென்றால், அந்த அதிக மதிப்பீடு  அவருக்குத் தூக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்னை(Obstructive Sleep Apnea (OSA)) இருப்பதையே உறுதி செய்கிறது. அந்த நிலையில் Sleep Study என்ற செயல்முறையை நோயாளிக்குப் பரிந்துரைப்போம்.

இதனை மருத்துவமனை அல்லது வீட்டில் பல Wireகளை கொண்ட ஓர் உபகரணத்தைப் பயன்படுத்தி நோயாளியின் உடலில் இதயத் துடிப்பு, கண் துடிப்பு, மூளைச் செயல்பாடு, உடல் அசைவு, ஆக்ஸிஜன் அளவு, சுவாசம் என அனைத்தையும் 8 மணி கால அளவில் இக்கருவி அளவிட்டு, பதிவு செய்யும்.

READL ALSO: உங்க நுரையீரல் ஆரோக்கியமா இருக்கா?

தூங்கும் போது இந்த Wireகளைப் பொருத்திக் கொண்டு தூங்க வேண்டும். அந்த 8 மணி நேரம் இக்கருவியானது நோயாளியின் உடலின் மொத்த செயல்பாடுகளையும் பதிவு செய்யும்.

பின்பு பதிவு செய்த அந்தத் தரவுகளைக் கொண்டு மருத்துவர்கள் நோயாளியுடன் கலந்து ஆலோசிப்பார்கள். இந்தப் பதிவில் ஒரு மணி நேரத்துக்கு எத்தனை முறை உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து, 1 மணி நேரத்தில் 15 -20 முறைக்கு மேல் மூச்சுத் திண்றல் ஏற்பட்டிருந்தால், நோயாளிக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யபடும். இது மிகவும் சிக்கலானது. அதைச் சரி செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read