Sleep apnea எனப்படும் தூக்கத்தில் மூச்சடைப்பு பற்றிய தொடரை பார்த்து வருகிறோம். இதுவரை தூக்கத்தில் மூச்சடைப்பு என்றால் என்ன? அதன் பாதிப்புகள், வகைகள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த கட்டுரையில் தூக்கத்தில் மூச்சடைப்பு வியாதிக்கு என்னென்ன பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பரிசோதனை
உங்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபரிடமிருந்து உங்கள் தூக்க வரலாற்றையும் ஒரு முழுமையான உடல் பரிசோதனையையும் உங்கள் மருத்துவர் மேற்கொள்வார்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் நோயின் ஒரு உறுதியான நிலையை கண்டறிய தூக்க மையத்தில் வைத்து இரவுநேர கண்காணிப்பு மூலம் சுவாசம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை விரிவாக பரிசோதனை செய்வர்.

இதையும் படிக்கலாமே: தூக்கம், குறட்டை… நடுவே மூச்சுத் திணறலா? | தேவை அதிக கவனம்!
மேலும், ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா இருக்கிறதா என்பதைக் கண்டறிய, பாலிசோம்னோகிராம் (Polysomnogram) என்ற டெஸ்ட் செய்யப்படும்.
இதில், சம்பந்தப்பட்ட நபரை தூங்கச் சொல்லி, அவர் தூங்கும் முறை, குறட்டைச் சத்தத்தின் அளவு, மூச்சுக்குழாயில் ஏற்படும் சிரமங்கள், கண்களின் அசைவுகள் போன்றவை எந்திரங்களின் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். அதை வைத்து, பாதிப்பின் தீவிரம் கண்டறியப்படும்.
ஸ்லீப் ஆப்னியா என்பது, பார்வைக்குறைபாடு போன்ற ஒரு குறைபாடு. வாழ்நாள் முழுவதும் இருக்கும். சிலருக்கு நாள்பட நாள்படச் சரியாகும்.

இதையும் படிக்கலாமே: உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய தூக்கத்தில் மூச்சுத்திணறலின் வகைகளும், சிக்கல்களும்!
சிகிச்சை
இதற்கான சிகிச்சைகளில், உடல் எடை குறைத்தல், மது, புகைப் பழக்கத்தை நிறுத்துவது, தூங்கும் முறையில் மாற்றம் கொண்டுவருவது, மாத்திரைகளைக் குறைப்பது போன்ற வாழ்வியல் மாற்றங்கள்தான் முதல்கட்ட பரிந்துரை.
அதை தொடர்ந்து, CPAP (Continuous Positive Airways Pressure) அல்லது BPAP (Bi-level Positive Airways Pressure) என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். இதில், ஒருவகை மாஸ்க் நோயாளிகளுக்குத் தரப்படும். தூங்கும் நேரத்தில் இதை அணிந்துகொள்ளச் சொல்வார்கள்.

இதையும் படிக்கலாமே: உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய தூக்கத்தில் மூச்சுத்திணறலின் வகைகளும், சிக்கல்களும்! – Part-2
இவை அனைத்தையும் செய்தும் பிரச்னை சரியாகாவிட்டால், அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருக்கும். குறட்டையை, ஏதோ சாதாரணப் பிரச்னை என்று பலரும் தட்டிக்கழிக்கிறார்கள்.
குறட்டை, நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு முறையான, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
தூக்கத்தில் மூச்சடைப்பு பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும் சரி, அதற்கான சிகிச்சைகளுக்கும் சரி நுரையீரலியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன் இருக்கிறார்.
