Homeமன நலம்ரசிக்க... சிரிக்க... யோசிக்க!

ரசிக்க… சிரிக்க… யோசிக்க!

  • ‘‘எந்த விஷயமா இருந்தாலும் என் மனைவி தன் மண்டையை உடைச்சிக்கிட்டு யோசிப்பா…’’
    ‘‘பரவாயில்லையே… என் மனைவி, என்னோட மண்டையை உடைச்சிட்டு அப்புறமா யோசிக்கிறா!’’
  • கண்ணை மூடினா தூங்கணும் அவசியமில்ல… ஆனா தூங்கணும்னா கண்டிப்பா கண்ண மூடித்தான் ஆகணும். இதுதான் வாழ்க்கை!
  • அவசரப்பட்டு ‘சரி’ன் சொன்னீங்கன்னா, அப்புறம் அடிக்கடி ‘சாரி’ கேட்க வேண்டியிருக்கும்.
  • சில இடங்களிலே நம்ம ஒசரத்துக்கு இடிக்காதுன் நல்லாத் தெரிஞ்சும் நாம குனிஞ்சேதான் போவோம்… அந்தக் குனிவுக்குப் பேருதான் பயம்!
  • குடையை தானமாகக் கொடுத்தால் ‘நன்கொடை’ன் சொல்லணுமா… இல்லே, ‘நன்குடை’ன் சொல்லணுமா?
  • பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குன் அர்த்தம். இரவு தூக்கம் வரலைன்னா, மனசு பலவீனமா இருக்குன் அர்த்தம்!
  • பணம் சம்பாதிப்பது என்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல… ரொம்ப கஷ்டம்! ஆனால் பணம் செலவழிப்பது என்பது, குண்டூசியால் பலூனை உடைப்பது போல… நொடியில் முடிந்துவிடும்!
  • நோய் வரும் அளவுக்குச் சாப்பிடுபவன், உடல் நலமாகும் வரை உண்ணாமல் இருக்க வேண்டி வரும்!
  • பலருக்கு உலகம் என்பது பக்கத்து வீட்டோடு முடிந்துவிடுகிறது. ‘அடுத்த வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ…’ என்ற கவலையிலேயே காலம் தள்ளிவிடுகின்றனர்.
  • ரேஷன் கார்டுல இருக்கற போட்டோ, 15 வருஷத்துக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம் காட்டுது. ஆதார் கார்டுல இருக்கற போட்டோ, 15 வருஷத்துக்கு அப்புறம் நாம எப்படியிருப்போம் காட்டுது!
  • வாழ்க்கையில சிக்கல் வந்தா, அதை நக்கலா பார்த்துச் சிரிக்கணும்… புரியுதா?
  • எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும் சொல்றாங்க. எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும் சொல்றாங்க. என்னதான் செய்யறதோ!
  • பிரச்னைகள், அவரவர் துழாவும் கைமணல் போன்றது. அடுத்தவர் கைமணலை பார்க்க ஆரம்பித்தால், தம் கைமணல் மிகவும் குறைவானதென்று தெரிய வரும்!
  • விடுமுறைகளில்தான் அதிகம் வேலையிருக்கிறது,
    பெண்களுக்கு…
  • நான்கு பேர் வாழ்வதற்காக 40 பேர் தங்குமளவு கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கெல்லாம் ஒரு பெயரும், அந்த பெயரின் பின்னால் ‘குடில்’ என்ற வார்த்தையும் இருக்கின்றன.
  • துவைத்தபின் காசு தருகிறது… வாஷிங் மெஷின். எவ்வளவுதான் செக் பண்ணாலும், ஏதோ ஒரு நாணயமோ, நோட்டோ அவ்வப்போது மாட்டிக்கொள்கின்றன.
  • ஹார்ன் அடிச்சா ஆடு, மாடுக்குக்கூட காதுல விழுது; ஆண்ட்ராய்டு போனோட நடக்குறவங்களுக்கு காதுல விழ மாட்டேங்குது!
  • ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’’
    அம்மா சொன்னாள், ‘‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’’
    அன்று பள்ளிக்குச் சென்றபோது அவனது ஆசிரியை, ‘‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.
    ஒரு பையன் ‘டாக்டர்’ என்றான். இன்னொரு பையன் ‘எஞ்சினியர்’ என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால் அந்தச் சிறுவன் மட்டும், ‘‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’’ என்றான்.
    ஆசிரியை கோபமாக, ‘‘உனக்குக் கேள்வி புரியவில்லை’’ என்றார்.
    சிறுவனோ, ‘‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’’ என்றான்!
  • ஒரு திருமண விழா. எல்லோரும் கூட்டமாக அமர்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த நேரம், திடீரென்று அந்த இடத்தில் ஆம்புலன்சின் சைரன் சத்தம் கேட்டது. அனைவரும் பதற்றத்துடன் சுற்றும்முற்றும் பார்க்க, திருமணத்துக்கு வந்திருந்த ஓர் இளைஞர், தனது செல்போனை எடுத்து ஆன் செய்து பேசினார். அப்போதுதான் புரிந்தது… அனைவரையும் பதற வைத்த ஆம்புலன்ஸ் அலறல் சத்தம் அந்த இளைஞரின் செல்போன் ரிங்டோன் என்று!
    ரிங்டோனாக வைக்க எத்தனையோ நல்ல இசைகளும் பாடல்களும் இருக்க, இப்படிப்பட்ட திகிலான சத்தத்தை வைத்து மற்றவர்களைப் பதற வைக்கலாமா?
  • உறவுக்காரப் பெண் ஒருவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. பல ஆண்டுகளுக்குமுன் அவளுக்கு வரன் தேடியபோது போட்டோ வாங்கிச் சென்ற ஒரு தரகர், போன் செய்து ஒரு வரனைப் பற்றிச் சொன்னார். அவர்கள் பெண்ணுக்குத் திருமணம் முடிந்து விட்டதைச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து பல மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்தும் அவர்களுக்குப் போன் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட அந்தத் தரகரிடம் அதன்பின் கொஞ்சம் கடுமையாகவே பேசி, அவர்கள் பெண்ணின் போட்டோ, பயோடேட்டாவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.

    சில கல்யாணத் தரகர்கள் பெண்களின் போட்டோ, பயோடேட்டாக்களை வைத்துக் கொண்டு, பலரிடமும் காண்பித்து, ஒரு வரன் தருவதற்கு இவ்வளவு என மோசடியாகப் பணம் பார்க்கிறார்கள். கையில் நிறைய போட்டோ இருந்தால்தானே நிறைய வசூலாகும்! இதற்காகத் திருமணமான பெண்களின் போட்டோக்களையும் பத்திரமாக வைத்திருக்கிறார்களாம். வரன் தேட புகைப்படம் மற்றும் பயோடேட்டா கொடுக்கும் பெற்றோரே, உஷார்!

    இதுபோல நீங்கள் ரசித்த, அனுபவித்த சுவையான விஷயங்களை எழுதி அனுப்புங்கள்.

ஹார்ன் அடிச்சா ஆடு, மாடுக்குக்கூட காதுல விழுது; ஆண்ட்ராய்டு போனோட நடக்குறவங்களுக்கு காதுல விழ மாட்டேங்குது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read