மேம்படுத்தப்பட்ட முதியோர் வீட்டு சிகிச்சை திட்டம்!
அவசர கால தேவைகளுக்கான முதியோர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் திட்டம் ஒன்று சென்னையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. நடக்க முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், நாளடைவில் இந்தத் திட்டத்தில் இருந்த மருத்துவர்களின் எண்ணிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. சென்னையின் சில பகுதிகளுக்கு இத்திட்டத்தில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தனர். மேற்கண்ட இடங்களுக்கு நேரிலேயே சென்று மருத்துவர்களிடம் பேசி இந்தத் திட்டத்தில் சேர்த்தோம். சிலரிடம் தொலைபேசியில் பேசி அழைத்து இணைத்தோம்.
“தமிழக அரசு இதைத் தொடங்கி வைத்தால், இந்தியாவிலேயே முதியவர்களுக்கு முதன்முதலாக வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பெருமையும் அரசுக்குக் கிடைக்கும்.”

வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய கையேடு வருடம் ஒரு முறை வெளியிடப்படும். இந்தக் கையேடை எனது கிளினிக் மற்றும் அறக்கட்டளையில் உள்ள அலுவலர்கள் வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் தொடர்பு கொண்டு கேட்டால், அவர்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களின் விவரம் தெரிவிக்கப்படும். நோயாளியின் உறவினர்கள் தொடர்புகொண்டால், அவர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவர் சிகிச்சை அளிப்பார். இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள மருத்துவர்களுக்கு கால முறைப்படி முதியோர் நலக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
எங்கள் அறக்கட்டளைமூலம் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் 50 மருத்துவர்கள், பல் மருத்துவர், இயற்கை மருத்துவர், சித்த மருத்துவர், ஹோமியோபதி மருத்துவர், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்டு 06.02.2017 அன்று விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது மனநிறைவு தரும் செய்தி.
இந்தத் திட்டத்தில் சேவை பெறுவதற்கு சென்னையில் உள்ள மருத்துவர்களை அணுக:
- ஆதிபராசக்தி கிளினிக்: 044 26412030
- டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளை: 044 48615866 / 99949 02173
அறக்கட்டளைமூலம் இத்திட்டம் சென்னையைத் தாண்டிப் பிற இடங்களிலும் செயல்படுத்தப்பட்டது.
ஈரோட்டில் உள்ள காசியண்ண கவுண்டர் சேவை மருத்துவமனையில், எங்கள் அறக்கட்டளையின் பணிகளுக்காக 10 படுக்கைகள் கொடுக்கப்பட்டன. இதில் முதியவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காசியண்ண கவுண்டர் சேவை மருத்துவமனை திறப்பு விழாவில் (10.03.2019), முதியவர்களுக்கு வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிப்பது பற்றி ஒரு கையேடு இலவசமாக் கொடுக்கப்பட்டது. இந்தக் கையேடை உருவாக்க, டாக்டர் ஹரிசங்கர் மற்றும் டாக்டர் ரித்திகா ரெட்டி ஆகியோர் பெரிதும் உதவினார்கள்.
என் மருத்துவ நண்பர்கள்மூலம் இத்திட்டம் கீழ்க்கண்ட ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- மதுரை, டாக்டர் என்.ராஜா, 94430 41062
- சேலம், டாக்டர் கார்த்திகேயன், 99940 28701 மற்றும் டாக்டர் எஸ்.பிரபாகரன், 98942 14134
- கோவை, டாக்டர் சதிஷ்குமார், 97907 92110/0422 4345944
- கோவை கிராண்டு வேர்ல்ட் எல்டர் கேர், 76677 11111/ 91766 88689
- கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை, 0422 4305364/ 97896 00253
- கோவை டாக்டர் ராகுல் எல்டர் கேர், 78711 11247
- செஞ்சி,- டாக்டர் சுப்புராயன், 94434 97565
- வேலூர், டாக்டர் பிஜின் ஆலிவர் ஜான், 98403 81851
- திருச்சி,- டாக்டர் பி.ரஞ்சித், 96001 45125
- தேனி,- டாக்டர் பிரபுசங்கர், 96004 07494
- பெங்களூரு, டாக்டர் பிரத்மேஷ், 97403 24315, டாக்டர் அருணா, 97389 46938 மற்றும் டாக்டர் அசோஜித், 94491 64036.
நகர்ப்புற முதியோர்களுக்கே இத்திட்டம் அதிகம் பயன்படுகிறது. ஆனால், முதியோர்கள் அதிகம் வசிப்பது கிராமப்புறங்களில்தான். கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், 108 அவசர ஊர்தியின் துணைகொண்டு முதியோர்களுக்கு அவசர கால சிகிச்சையை வீட்டிலேயே சென்று அளிக்கலாம். இதற்கு ஒரு சிறுதொகையைக் கட்டணமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
அரசு இப்படி ஓர் அரிய திட்டத்தைத் தொடங்கினால், நூற்றுக்கணக்கான முதியோர்களுக்கு உரிய காலத்தில் தக்க மருத்துவ உதவி கிடைக்கும். தமிழக அரசு இதைத் தொடங்கி வைத்தால், இந்தியாவிலேயே முதியவர்களுக்கு முதன்முதலாக வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பெருமையும் அரசுக்குக் கிடைக்கும். இத்திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த எனது அறக்கட்டளைமூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
(பயணம் தொடரும்…)

பத்மஶ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
மூத்த முதியோர் நல மருத்துவர்